Home புதினங்களின் சங்கமம் யாழில் தனது எலும்பு இல்லாத மென்மையான உறுப்பினால் வாகனத்தை இழுத்து திருச்செல்வம் சாதனை !! வீடியோ

யாழில் தனது எலும்பு இல்லாத மென்மையான உறுப்பினால் வாகனத்தை இழுத்து திருச்செல்வம் சாதனை !! வீடியோ

தென்மராட்சியின் சாதனை நாயகன் செல்லையா திருச்செல்வம், 1500 கிலோகிராம் எடையுள்ள ஹயஸ் வாகனத்தை 100 மீட்டர் தூரம் தனது இரு காதுகளால் கட்டி இழுத்து சாதனை படைத்துள்ளார்.

இன்று காலை 9.00 மணியளவில் யாழ்.கொடிகாமம், நட்சத்திர மஹால் முன்றலில் ஏ9 வீதியில் இந்த சாதனை நிகழ்வு இடம்பெற்றது.

வாகனத்தை வெற்றிகரமாக காதுகளால் இழுத்து சாதனை புரிந்த செல்லையா திருச்செல்வம் இதன்போது கெளரவிக்கப்பட்டார்.

இதேவேளை, முன்னர் தமிழ்நாடு, கொழும்பு, யாழ்ப்பாணம் என  பல தடைகள் செல்லையா திருச்செல்வம், தனது தாடியால் பல்வேறு வாகனங்களை இழுத்து சாதனைபுரிந்து சோழன் உலக சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்தமை குறிப்பிடத்தக்கது.

Previous articleவிபத்தில் இளம் தாய் பலி: இருவர் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதி!!
Next articleவெளிநாட்டு விசரில் திரிந்த யாழ் இளைஞனை ஏமாற்றி 15 லட்சம் சுருட்டிய கொழும்பு பெண்!!