யாழ் மாநகரசபையின் முன்னாள் மேயர் யோகேஸ்வரி பற்குணராஜாவின் மகன் உபேந்திராவின் கலியாணம் கடந்த 2ம் திகதி Cinnaman Grand – Oak Room இல் மிகவும் கோலாகலமாக நடந்துள்ளது. ஆனால் குறித்த கலியாண வீட்டுக்கு அமைச்சர் டக்ளஸ்தேவானந்தாவைத் தவிர வேறு முக்கிய அரசியல்வாதிகள் எவரும் கலந்து கொள்ளவில்லை என ஈ.பி.டி.பி கட்சியின் உறுப்பினர்கள் சிலர் கவலை தெரிவித்துள்ளார்கள்.
தற்போதய ஜனாதிபதி ரணில், முன்னாள் ஜனாதிபதி மகிந்த மற்றும் தற்போதய பிரதமர் ஆகியோர் உட்பட ஏராளமான அரசியல் முக்கியஸ்தர்களுக்கு கலியாண வீட்டு அழைப்பிதழ் கொடுக்கபட்டதாம். ஆனால் அவர்கள் ஒருவரும் வரவில்லையாம்.
அமைச்சர் டக்ளஸ்தேவானந்தாவின் நெருங்கிய வட்டத்துக்குள் இருப்பவர் யோகேஸ்வரி. இவர் யாழ் மாநகரசபைத் தேர்தலில் மிகக் குறைவான வாக்குகளைப் பெற்றிருந்தாலும் ஈ.பி.டி.பி அமைப்பில் முக்கிய பங்காற்றி குறித்த தேர்தலில் ஏராளமான வாக்குகள் பெற்று முன்னிலையில் இருந்த ரீகனை புறந்தள்ளி மேயராக நியமிக்கப்பட்டவர்.
ரீகன் டக்ளசுடன் செயற்பட்ட முக்கிய போராளி எனினும் மாநகரசபையை கொண்டு நடத்துவதற்குரிய அறிவாற்றல் இல்லை என கருதியே வேம்படியில் ஏ.எல் மாணவிகளுக்கு சிறப்பாக கல்வி கற்பித்த யோகேஸ்வரியை மாநகரசபை மேயராக ஆக்கினார் டக்ளஸ்.
ஆனால் ரீகனுக்கு அடுத்ததாக அதிக வாக்குகள் பெற்றவர் மங்களநேசன். இவரும் தாழ்த்தப்பட்ட சமுகத்தைச் சேர்ந்தவர். புலிகளுக்கு எதிராக இலங்கை வானொலியில் இதயவீணை எனும் நிகழ்ச்சியை நடாத்தி சிறப்பு பெற்றவர் மங்களநேசன். இவ்வறான நிலையில் தனக்கு யாழ் மாநகரசபையை நிர்வகிக்கும் திறன் இருப்பதாகவும் தானே அடுத்த மேயராக வரவேண்டும் என மங்களநேசனும் ஒற்றைக்காலில் நின்றார். அவரையும் புறந்தள்ளியே யோகேஸ்வரி நியமிக்கப்பட்டார். இதனால் கடுப்படைந்த மங்களநேசன் நிறை போதையில் வடிவேலு பாணியில் டக்ளசையும் யோகேஸ்வரியையும் இணைத்து யாழ் மாநகசபைக்கு வந்து உளறி கத்திய பின் தனது வீட்டுக்குச் சென்று படுத்துவிட்டார். இவரது உளறல் டக்ளசின் காதில் எட்டியது. அப்படியே வேட்டியை மடித்துக் கட்டிக் கொண்டு மங்களநேசன் வீட்டுக்கு விரைந்தார் டக்ளஸ். அங்கு படுத்திருந்த மங்களநேசனை அப்படியே குண்டுக்கட்டாகக் சிறிதர் தியேட்டருக்கு கொண்டு சென்று கும்பாபிசேகம், சங்காபிசேகம் போன்றவற்றை சிறப்பாக செய்து முடித்து பல நாட்களின் பின்னரே தியேட்டரை விட்டு வெளியேறிச் செல்ல அனுமதிக்கபட்ட வரலாறு அனைவருக்கும் தெரியும்..
யோகேஸ்வரி அவர்களின் ஆட்சிக் காலம் யாழ் மாநகரபையிலிருந்து முடிவடைந்த பின்னர் மகிந்த ஆட்சி மாறி சிறிசேனகூரே ஜனாதிபதியாக வந்த பின்னரும் மகிந்த அவர்களின் கட்சியுடன் நெருங்கிச் செயற்பட்டவர் யோகேஸ்வரி. கோத்தபாயா ஜனாதிபதியாக வந்த பின்னரும் அவருடன் சேர்ந்து பணியாற்றிவர் யோகேஸ்வரி அவர்கள்.
இவ்வாறான நிலையில் தனது மகனின் கலியாணத்தை அரசியல்தலைவர்கள் மத்தியில் நடத்த வேண்டும் என்ற ஆசையில் அரசியல் தலைவர்களுக்கு பெரும் எடுப்பில் அழைப்பிதழ்கள் கொடுக்கப்பட்டும் குறிப்பிடத்தக்க எவரும் கலியாணவீட்டுக்கு வரவில்லை என கட்சியின் உறுப்பினர்கள் மூலம் தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஈ.பி.டி.பி கட்சி உறுப்பினர்கள் பலருக்கும் அமைச்சரின் சில நடவடிக்கைகள் பிடிக்கவில்லையாம்.ஈ.பி.டி.பி கட்சியில் முக்கிய உறுப்பினராக இருக்கும் பலரும் இது தொடர்பாக தமக்கு நெருங்கிய நண்பர்களாக உள்ள பலருக்கு கருத்துத் தெரிவித்து வருகின்றார்கள்.
ஆரம்ப காலம் தொடங்கி டக்ளசுடன் தோளோடு தோள் நின்று போராடி டக்ளசைப் பாதுகாத்த கட்சி உறுப்பினர்கள், தொண்டர்களைப் புறந்தள்ளி் டக்ளஸ் தேவானந்தா செயற்படுகின்றாராம். வந்தான் வரத்தானுகளுக்கு எல்லாம் தனது அமைச்சில் இடம் கொடுத்து அவர்களைப் பெரியவர்களாக மாற்றி வைத்துள்ளாராம். இதனால் கட்சி உறுப்பினர்கள் எல்லோரும் ஏனோதானோ என்ற நிலையில் திரிகின்றார்களாம்…… இவ்வாறு கட்சி உறுப்பினர்களின் புலம்பல்கள் தொடர்ந்த வண்ணம் உள்ளதாக உறுப்பினர்களுக்கு நெருங்கிய வட்டாரங்கள் ஊடாகத் தெரியவருகின்றது.





