புதினங்களின் சங்கமம்

ரபிக் பொலிஸ் அதிகாரியை கண்டதும் காதலாகி உடல் உறவு!! கர்ப்பத்தை கலைக்க ஆயத்தம்!! பொலிஸ் விசாரணை!!

தன்னுடனான உறவில் ஏற்பட்ட கருவை கலைக்குமாறு பொலிஸ் பரிசோதகர் ஒருவர் பெண்ணை மிரட்டியதாக கொழும்பு சிறுவர் மற்றும் பெண்கள் பணியகம் கொழும்பு மேலதிக நீதவான் டி.என்.எல்.இளங்கசிங்கவிடம் நேற்று (15) அறிக்கை தாக்கல் செய்தது.

தன்னுடன் உறவில் ஈடுபட்ட பெண்ணொருவரை கருவை கலைக்குமாறு அச்சுறுத்திய கட்டுநாயக்க பொலிஸ் பரிசோதகர் ஒருவரை கைது செய்வதற்கான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் நீதிமன்றத்தில் அறிக்கையிடப்பட்டது.

சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், அச்சுறுத்தல் விடுக்கப்பட்ட சிம் அட்டைக்குரிய தொலைபேசி நிறுவனத்திடம் இருந்து தரவு அறிக்கையைப் பெற்றுக்கொள்ளுமாறு உத்தரவிடுமாறும் நீதிமன்றத்திடம் சிறுவர் மற்றும் பெண்கள் பணியகம் கோரியுள்ளது.

குறிப்பிட்ட பொலிஸ் பரிசோதகர் போக்குவரத்து பணியில் இருந்தபோது முறைப்பாட்டாளரான பெண் சந்தித்ததாகவும், அந்தப் பெண் சலூன் உரிமையாளர் என்பதும் நீதிமன்றத்தில் தெரியவந்தது.

இருவருக்குமிடையில் ஏற்பட்ட காதல் விவகாரத்தால் அந்த பெண் கர்ப்பமாகியதாகவும், கருவை கலைக்குமாறு பொலிஸ் பரிசோதகர் தன்னை தொலைபேசியில் மிரட்டியதகவும் முறைப்பாட்டாளர் குழந்தைகள் மற்றும் பெண்கள் பணியகத்திற்கு தகவல் கொடுத்தார்.

இந்த முறைப்பாட்டின் பிரகாரம், விசாரணைகளை ஆரம்பித்துள்ள சிறுவர் மற்றும் பெண்கள் பணியகம், முறைப்பாட்டாளருக்கு தொலைபேசி அழைப்புகளை மேற்கொண்ட தொலைபேசி தொடர்பான அழைப்பு தரவு அறிக்கையை பொலிஸாருக்கு வழங்குமாறு சம்பந்தப்பட்ட தொலைபேசி நிறுவனத்திற்கு உத்தரவு பிறப்பிக்குமாறு நீதிமன்றத்திடம் கோரியுள்ளது.

குறித்த விடயங்களை பரிசீலித்த நீதவான், அழைப்பு பதிவுகளை வழங்குமாறு சம்பந்தப்பட்ட தொலைபேசி நிறுவனத்திற்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.