திருகோணமலை இந்துகலாச்சார மண்டபத்தில் திருவிளையாடல் நடாத்தினாரா அகஸ்டின்?? (வீடியோ)
எம்மதமும் சம்மதம் என நினைத்து இன்னொரு மதத்தின் நிகழ்வினை இந்து மண்டபத்தில் நடாத்துவதற்கு அனுமதியளித்த திருகோணமலை இந்து கலாச்சார அமைப்பினருக்கு நன்றிகள்…..
திருகோணமலையில் இவ்வாறான இந்துகலாச்சார அமைப்பினர் இருக்கின்றமையால்தான் கன்னியாவில் புத்தர் வந்து சந்தோசமாக இருக்கின்றார். திருகோணமலை நகரப்பகுதியிலும், திருகோணமலை கோணேசர் கோவிலுக்கு அருகேயும் சந்தோசமாக புத்தர் வந்து இருப்பதால்தான் திருகோணமலை மிகவும் சந்தோசமா உள்ளது. எம்மதத்தவரையும் அனுசரித்து நடக்கும் திருகோணமலை இந்து கலாச்சார அமைப்பினரைப் போல் ஏனைய மாவட்டங்களிலும் உள்ள இந்துசமயக் காவலர்கள் இருந்தால் இந்துக்கள் மிகவும் சந்தோசமாக வாழ்வார்கள்.
இதோ பாருங்கள் இந்து சமயத்தின் கடவுள்களான பிள்ளையார், சிவன், முருகன் போன்றவர்களையும் அனுமாரையும் நம்ம ஜேசுபிரான் பக்தர் எவ்வளவு சந்தோசமாக கிண்டலடிக்கின்றாா் என்று….. இதே போல் திருகோணமலையிலும் கிண்டல் அடித்திருப்பாரா??


