யாழில் பியர் குடித்த போட்டே பேஸ்புக்கில் பதிவிட்ட கம்பஸ் பெடியன்!! காதலியின் தந்தையின் பேஸ்புக்கிற்கு Tag பண்ணிய நண்பர்கள் மீது தாக்குதல்!
யாழைச் சேர்ந்த கொழும்புப் பல்கலைக்கழக 2ம் வருட மாணவன் தனது நண்பர்கள் இருவரை கொட்டனால் தாக்கியதாக பொலிசில் முறையிடப்பட்டுள்ளது. குறித்த மாணவன் வருட இறுதியில் யாழ் நகரில் உள்ள பிரபல விடுதியில் நடந்த ஆண்டு இறுதிக் கொண்டாட்டத்தில் நண்பர்களுடன் கலந்து கொண்டிருந்தார். அப்போ அங்கு இருந்த மிகப் பெரிய பியர் பரல் ஒன்றுடன் நின்று செல்பி எடுத்ததுடன் கிளாஸ் ஒன்றில் பியர் அருந்துவது போலவும் செல்பி எடுத்து அதனை நண்பர்கள் மட்டும் பார்க்கும் படி பேஸ்புக்கில் பகிர்ந்துள்ளார். அந்த போட்டோவை அவரது நண்பன் தனது பேஸ்புக்கில் பகிர்ந்ததுள்ளார். அந்தப் பகிர்வுக்கு மற்றுமொரு நண்பன் பியர் குடித்த மாணவனின் காதலியின் தந்தையின் பேஸ்புக்கிற்கு Tag பண்ணியுள்ளார். தனது தந்தையின் பேஸ்புக்கிற்கு தனது காதலன் பியருடன் நிற்கும் புகைப்படம் வந்துள்ளதை பார்த்து அதிர்ந்த காதலி இது தொடர்பாக காதலனிடம் கூறியுள்ளார். அதன் பின்னரே தனது புகைப்படத்தை பேஸ்புக்கில் பதிந்த நண்பனையும் அதனை Tag செய்த நண்பனையும் குறித்த காதலன் கடுமையாகத் தாக்கியதாகத் தெரியவருகின்றது. கொழும்பில் அறை ஒன்றில் தங்கியிருந்த இருவரையும் அங்கு திடீரெனப் புகுந்து குறித்த காதலன் கொட்டனால் கடுமையாகத் தாக்கியுள்ளார். இதனால் தலை மற்றும் முகத்தில் காயங்களுக்கு உள்ளான இரு மாணவர்களும் தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வெளியேறியுள்ளனர். அத்துடன் குறித்த மாணவர்களின் குடும்பத்தினர்களின் துாண்டுதலால் அவர்கள் பொலிஸ் நிலையத்தில் முறையிட்டுள்ளதாகத் தெரியவருகின்றது. இச் சம்பவம் மாணவர்களின் நண்பர்களுக்கிடையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாகத் மாணவர்கள் தெரிவிக்கின்றனர்.

