73 வயது இலங்கை தமிழரிற்கு அவுஸ்திரேலியாவில் மலர்ந்த காதல்; யுவதியை கட்டிப்பிடித்து போன் நம்பர் கேட்டார்: நீதிமன்றம் வழங்கிய தண்டனை!
சிட்னி விமான நிலையத்தில் சுங்கப் பணியாளராகப் பணிபுரிந்த இலங்கையின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஒருவர் பாலியல் குற்றச்சாட்டில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ளார்.
அன்ரனி அப்பாத்துரை என்ற 73 வயதான முதியவர், வயதில் குறைந்த ஒரு யுவதியை காதலிப்பதாகக் கூறி, அவளது ஆடைகளைப் பிடித்து இழுத்து, முகக்கவசம் அணிந்தபடி முத்தமிட முயன்றுள்ளார்.
அப்பாத்துரை, கடந்த ஓகஸ்டில் இந்த திருவிளையாடலில் ஈடுபட்டார். அவர் மீது முன்னைய குற்றச்சாட்டுக்கள் பதிவாகாததால், டிசம்பர் 2022 வரை சமூகத் திருத்த உத்தரவில் இருப்பார். கடந்த வாரம் தண்டனை அறிவிக்கப்பட்டது.
ஆரம்பத்தில் அந்த யுவதியை கட்டிப்பிடித்து, தழுவிக்கொண்டு முத்தமிட முயன்றார். தன்னைப் பற்றி பெருமையாகவும் குறிப்பிட்டுள்ளார்.
யுவதியின் தொலைபேசி எண்ணை வழங்குமாறு அப்பாத்துரை அழுத்தம் கொடுத்தார். யுவதியின் எண்ணை பெற்று, அதற்கு குறுஞ்செய்தி மூலம் தன் காதலை வெளிப்படுத்தினார்.
இதனால் சங்கடமான அந்த பெண், தனக்கு ஒரு ஆண் நண்பன் இருப்பதாகக் கூறினார். ஆனால் அப்பாத்துரை அடங்கவில்லை. யுவதிக்கு தொல்லை கொடுத்தார்.
அப்பாத்துரை நீதிமன்றத்தில் குற்றச்சாட்டை ஏற்றுக்கொண்டு, மன்னிப்பு கோரினார்.

