Home புதினங்களின் சங்கமம் யாழில் 4ம் வகுப்பு மாணவனை ‘காய்ச்சல்‘ என கூறி வீட்டுக்கு தனியே துரத்திய அதிபரும் ஆசிரியரும்!!

யாழில் 4ம் வகுப்பு மாணவனை ‘காய்ச்சல்‘ என கூறி வீட்டுக்கு தனியே துரத்திய அதிபரும் ஆசிரியரும்!!

யாழ்.அராலி பகுதியில் பாடசாலைக்கு சென்ற 4ம் வகுப்பு மாணவனுக்கு காய்ச்சல் ஏற்பட்டிருந்த நிலையில் அதிபரும், ஆசிரியரும் இணைந்து மாணவனை வீட்டிற்கு துரத்திய சம்பவம் இடம்பெற்றிருக்கின்றது.

குறித்த சம்பவம் தொடர்பில் மாணவனின் தந்தை கல்வி அமைச்சின் செயலாளருக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது,

4ம் வகுப்பில் கல்வி பயிலும் மாணவன் கடந்த 08.11.2021 அன்று பாடசாலைக்கு செல்லவில்லை. 09ஆம் 10ஆம் திகதிகளில் சீரற்ற வானிலை காரணமாக பாடசாலைகளுக்கு விடுமுறை விடப்பட்டிருந்தது.

இந்த நிலையில் மாணவன் கடந்த 11ஆம் திகதி வழமைபோல பாடசாலைக்கு சென்றிருந்தார். வகுப்புக்கு சென்ற மாணவனை ” நீ கடந்த 8ஆம் திகதி புதுமனைப் புகுவிழாவிற்கு சென்றியா? இடும்பன் பூசைக்கு சென்றியா?”

என அதட்டிய வகுப்பாசிரியர் சக இன்னொரு மாணவனை அழைத்து ” இவனுக்கு காய்ச்சல் என அதிபரிடம் கூறு” என அதிபரிடம் அனுப்பி வைத்தார். மாணவனும் ஆசிரியர் சொன்னதை அதிபரிடம் கூறியுள்ளான்.

அதைக்கேட்ட அதிபர் குறித்த மாணவனை திட்டியவாறு வீட்டுக்கு ஓடு என விரட்டியடித்தார். இதனால் மனமுடைந்த அந்த மாணவன் அழுதவாறு வீட்டிற்கு வந்து கொண்டிருந்தான்.

நான் அவனுக்கு சாப்பாடு கொடுப்பதற்காக பாடசாலைக்கு சென்றுகொண்டிருந்தவேளை மகன் அழுதபடி வீதியால் நடந்து வருவதை அவதானித்தேன். அவனிடம் நடந்ததை விசாரித்தேன்.

இதனயைடுத்து பாடசாலைக்குக் கூட்டிச் சென்றேன் பாடசாலையில் குறித்த விடயம் தொடர்பில் அதிபரிடம் வினவியபோது. அதிபர் ” உனது மகனுக்கு காய்ச்சல்” எனக்கூறினார்.

இதைக்கேட்ட நான் காய்ச்சல் என்றால் காய்ச்சல் பார்க்கும் கருவியை எடுத்து எனது மகனை இப்பொழுதே பரிசோதியுங்கள் எனக் கேட்டேன். எனது தொலைபேசி இலக்கம் வகுப்பாசிரியரிடம் உள்ளது.

அவ்வாறு காய்ச்சல் என்றால் ஏன் எனது தொலைபேசி இலக்கத்திற்கு அழைப்பினை மேற்கொள்ளவில்லை. எனது மகனுக்கு காய்ச்சல் இல்லை. காய்ச்சல் என்றால் பிள்ளையை நாங்கள் பாடசாலைக்கு அனுப்புவோமா?.

பிள்ளை பாடசாலையயில் இருக்கிறது என நாங்கள் இருப்போம். இடைநேரத்தி நீங்கள் வீட்டிற்கு துரத்திவிட்டால் வரும் வழியில் அவருக்கு ஏதாவது நிகழ்ந்தால் அதற்கு யார் பொறுப்பு? என கேட்டேன்.

இதற்கு பதிலளித்த பாடசாலை நிர்வாகம் மகனது பிறப்புச் சான்றிதழை எடுத்துச் சென்று அவனை வேறு பாடசாலையில் சேருங்கள் என்றார். ஆகவே அதிபர் இவ்வாறு தொடர்ந்து செயற்பட்டால் பெற்றோர்கள் ஒன்றிணைந்து

கவனயீர்ப்பில் ஈடுபடவேண்டிய சூழ்நிலை ஏற்படும் என அக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.