புதினங்களின் சங்கமம்

யாழ் ஏ – 09 நெடுஞ்சாலையில் விபத்து; முதியவர் மரணம்! இளைஞர் படுகாயம்!

யாழ்ப்பாணம் கொடிகாமம் பகுதியில் ஏ – 09 நெடுஞ்சாலையில் ஏற்பட்ட விபத்தில் படுகாயம் அடைந்தவர்களில் முதியவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவம் இன்று இரவு இடம்பெற்றுள்ளது.

மோட்டார் சைக்கிளும் மிதிவண்டியுமே விபத்தில் சிக்கியுள்ளதாக தெரியவருகிறது.

சம்பவத்தில் படுகாயம் அடைந்த செல்லையா சற்குணநாதன் (வயது 78), கிருஸ்ணகுமார் சுகிந்தன் (வயது 27) ஆகிய இருவரும் படுகாயம் அடைந்துள்ளனர்.

அவர்கள் இருவரும் உடனடியாக வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டபோதிலும் முதியவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.