Home புதினங்களின் சங்கமம் யாழில் பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகிய நிலையில் 20 வயது அஜந்தன் திடீர் உயிரழப்பு!!

யாழில் பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகிய நிலையில் 20 வயது அஜந்தன் திடீர் உயிரழப்பு!!

யாழ்ப்பாணம் குப்பிளான் கிராமத்தில் 20 வயதான இளைஞர் ஒருவர் திடீரென உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது. சம்பவத்தில் தமிழ்செல்வன் அஜந்தன் எனும் இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த இளைஞர் திடீர் சுகயீனம் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிற்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது. உயிரிழந்த இளைஞர் பல்கலைக்கழகத்திற்கும் தெரிவாகியிருந்தார்.

இந்நிலையில் இளைஞரின் திடீர் உயிரிழப்பால் குப்பிளான் கிராமமே பெரும் சோகத்தில் மூழ்கியுள்ளது.