Home புதினங்களின் சங்கமம் யாழிலும் பேரணியைக் குழப்ப அநாமதேய தரப்புக்கள் முயற்சி!

யாழிலும் பேரணியைக் குழப்ப அநாமதேய தரப்புக்கள் முயற்சி!

பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான நீதி கோரும் நெரும்பயணம் இன்று காலை பேரெழுச்சியுடன் கிளிநொச்சியில் இருந்து யாழ்.நோக்கி நகர்ந்துவரும் நிலையில் இதனைக் குழப்பும் வகையில் அடையாளம் தெரியாத அநாமதேய நபர்கள் யாழ்ப்பாணத்தில் ஆங்காங்கு சில இடங்களில் சுவரொட்டிகளை ஒட்டியுள்ளனர்.

‘கோவிட்-19 தொற்று நோயை யாழ்ப்பாணத்துக்குக் கொண்டுவரும் #P2P வேண்டாம்’ , ‘கோவிட்19 –ஐக் கொண்டுவரும் TNA, TNPF, TMTK’ போன்ற வாசகங்கள் எழுதப்பட்ட சுவரொட்டிகள் யாழ்.நகரம் உள்ளிட்ட சில பகுதிகளில் இருட்டிய நேரத்தில் ஒட்டப்பட்டுள்ளன.

கிளிநொச்சியிலும் பேரணியைக் குழப்பும் வகையில் இவ்வாறான சில சதி முயற்சிகள் இன்று காலை இடம்பெற்றமையும் குறிப்பிடத்தக்கது.

எனினும் இவ்வாறான சதி முயற்சிகளைக் கண்டுகொள்ளாத மக்கள் வழிநெடுகிலும் பேரணியில் ஆயிரக்கணக்கில் திரண்டு வருகின்றனர்.

No photo description available.No photo description available.No photo description available.