Home புதினங்களின் சங்கமம் இலங்கையை சேர்ந்த இளைஞன் இத்தாலியில் தவறி விழுந்து மரணம்!

இலங்கையை சேர்ந்த இளைஞன் இத்தாலியில் தவறி விழுந்து மரணம்!

இலங்கையை சேர்ந்த இளைஞன் ஒருவர் ஐரோப்பிய நாடொன்றில் தவறி விழுந்து மரணமடைந்துள்ளார்.

இத்தாலியின் ரோம் நகரத்தில் உள்ள மாடி வீட்டில் வாழ்ந்த நிலையில் நேற்று முன்தினம் திங்கட்கிழமை உயிரிழந்துள்ளளார்.

குறித்த இளைஞன், மொட்டை மாடியில் இருக்கு தவறி விழுந்தமையினால் அவர் உயிரிழந்துள்ளார்.

ரோம் வியா காசியா பிரதேசத்தில் தொழில் செய்த நிலையில் வாழ்ந்து வந்த சம்பத் என்ற 32 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தை என குறிப்பிடப்படுகிறது.

குறித்த இளைஞன் தவறி விழுந்தமையினால் படுகாயமடைந்திருந்த நிலையில் ரோம் சங்கமில்ல வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்துள்ளார்.

மாடி வீட்டில் இருந்து விழுந்த முறை தொடர்பில் மேலதிக விசாரணைகளை காசியோ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

உயிரிழந்தவர் கொழும்பின் புறநகர் பகுதியான பிலியந்தலை பிரதேசத்தை சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இதே போன்று ஒரு சம்பவம் கடந்த ஆண்டு கனடாவில் இடம்பெற்றது.

அதிலும் இலங்கையைச் சேர்ந்த இளைஞன் ஒருவர் தவறி விழுந்து உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.