யாழில் பெண் ரஞ்சிதா உட்பட்ட மூவர் மீது வாள்வெட்டு!! ரஞ்சிதாவுக்கு உடற் பகுதிகளும் வெட்டு!!
யாழ்ப்பாணம் வடமராட்சியின் கரணவாய் பகுதியில் சற்று முன்னர் இடம்பெற்ற வாள்வெட்டுச் சம்பவத்தில் பெண் ஒருவர் உட்பட்ட மூவர் படுகாயம் அடைந்துள்ளனர்.
கரணவாய் பகுதியைச் சேர்ந்த சந்திரமோகன் சஜிந்தன் (வயது 29), சண்முகம் சிவஞானசுந்தரம் (வயது 55), தேவராசா ரஞ்சிதா (வயது 35) ஆகியோரே வெட்டுக் காயங்களுக்கு உட்பட்ட நிலையில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவத்தில் ரஞ்சிதாவுக்கு பல்வேறு பகுதிகளிலும் வெட்டுக்காயங்கள் காணப்படுவதாக தெரியவருகிறது.
சஜிந்தன், சிவஞான சுந்தரம் ஆகிய இருவருக்கும் தலை, கை உட்பட்ட பல்வேறு பகுதிகளிலும் வெட்டுக்காயங்கள் காணப்படுவதாக தெரியவருகிறது.
சம்பவத்தால் பாதிக்கப்பட்டவர்கள் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளமையை வைத்தியசாலை பிரதிப் பொறுப்பதிகாரி அருவியிடம் உறுதிப்படுத்தினார்.
அவர்களில் ஒருவருக்கு வயிற்றுப் பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டுள்ள நிலையில் அதிதீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்படுவதாகவும் அவர் எமக்குத் தெரிவித்தார்.
இருப்பினும் சம்பவம் தொடர்பில் இதுவரையில் நெல்லியடி பொலிஸாரிடம் முறையிடப்படவில்லை என்று பொலிஸ் தரப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

