Home Uncategorized யாழ் தொண்டமாறில் திடீரென மயங்கி வீழ்ந்து குடும்பஸ்தர் பலி!!

யாழ் தொண்டமாறில் திடீரென மயங்கி வீழ்ந்து குடும்பஸ்தர் பலி!!

கிணற்றடியில் முகம் கழுவச் சென்ற போது, மயங்கிச் சரிந்த குடும்பத்தலைவர் ஒருவர்
உயிரிழந்துள்ளார்.

இந்தச் சம்பவம் தொண்டமனாறு இன்று காலை 7 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
தொண்டமனாறு கடற்கரை வீதியில் வசிக்கும் முல்லைத்தீவைச் சேர்ந்த அன்ரன் ஜோர்ஜ் (வயது-35) 2
பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

கிணற்றடிக்குச் சென்ற அவர் மயங்கிச் சரிந்த நிலையில் காணப்பட்டுள்ளார். அவரை உடனடியாக
மந்திகை வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்ற போதும் அவர் உயிரிழந்துள்ளார் என்று
தெரிவிக்கப்பட்டுள்ளது.

சடலம் மந்திகை வைத்தியசாலையில் உடற்கூற்றுப் பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.