புதினங்களின் சங்கமம்

திலீபன் நினைவேந்தல் விசர் கூட்டத்தின் தேவை இல்லாத வேலை!! மகிந்தவிடம் கூறிய சுமந்திரன்!!

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிற்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரனுக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

கொழும்பில் கடந்த செவ்வாய்க் கிழமை(22.09.2020) குறித்த சந்திப்பு நடைபெற்றுள்ளது.

இதன்போது, புதிய அரசியலமைப்புக்கான செயற்பாடுகள் தொடர்பில் பரஸ்பர கருத்துப்பரிமாற்றங்கள் இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இச் சந்திப்புத் தொடர்பில் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளுக்கோ அல்லது தமிழரசுக் கட்சியின் தலைமைக்கோ தெரியாது மிகத் தவறு என யாழ் மக்கள் ஆதங்கப் படுகின்றனர்.

காரணம் தியாகி திலிபன் பற்றி அனைவரும் பேசிக் கொண்டிருக்கையில் இப்படி கட்சியினதோ அல்லது கட்சித் தலைமையினதோ அனுமதி இன்றி சந்திப்பது தமிழ் இனத்துக்கு ஆபத்தானது என கட்சி முக்கியஸ்தர்கள் ஆதங்கப் படுகின்றனர்.

இதற்கு மாவை ஐயா என்ன நடவடிக்கை எடுப்பார் என் இளைஞர்கள் கொந்தளிக்கின்றனர்.

மேலும் சந்திப்புத் தொடர்பில்…

குறிப்பாக, புதிய அரசியலமைப்பொன்று உருவாக்குவதாக இருந்தால், தமிழ் மக்களின் அனைத்துப்பிரச்சினைக்கான தீர்வினையும் உள்ளடக்கியதாகவே அது அமைய வேண்டும் என்பதில் தான் உள்ளிட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகள் அனைவரும் அதீத கரிசனை கொண்டிருப்பதாக சுமந்திரன் பிரதமரிடம் கூறியுள்ளார்.

அதற்கு பதிலளித்த பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ “புதிய அரசியலமைப்பினை உருவாக்குவதில் அதிக அக்கறை கொண்டிருக்கின்றோம்.

அத்துடன் புதிதாக உருவாக்கப்படும் அரசியலமைப்பானது நிச்சயமாக தமிழர்களின் விடயங்களையும் உள்ளடக்கியதாகவே அமையும் என்றும் திட்டவட்டமாக கூறியுள்ளார்.

20வது திருத்த சட்டம் குறித்த சர்ச்சை அதிகரித்துள்ள நிலையில் குறித்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது என்பது 20வது திருத்தச் சட்டத்திற்கு எதிராக தமிழர்கள் வழக்குத் தாக்கல் செய்வார்கள் அதனை நீங்கள் கண்டு கொள்ளக் கூடாது இப்போது நீதி மன்றம் உங்கள் கட்டுப்பாட்டில் உள்ளது எமக்கு தெரியும் கூட்டமைப்பு ஒத்துளைக்கா விட்டாலும் நான் எப்படியாவது கூட்டமைப்பை கட்டுப் படுத்துவேன் எனக் கூறப்பட்டுள்ளது.

விடுதலைப் போராட்டத்தையே ஏற்கவில்லை நான், அப்படி இருக்கையில் திலீபனை நான் ஆதரிப்பதாக நீங்கள் நினைக்க வேண்டாம், உங்கள் நடவடிக்கையை நீங்கள் செயற்படுத்துங்கள் இதற்கு எமது கட்சியின் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவு எனக் குறிப்பிட்டதாக தென்னிலங்கை ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.

அத்துடன் திரு. மாவை எமது கட்சியின் இரு பாராளுமன்ற உறுப்பிர்களிடமும் கேட்டுக் கொண்டார் திலிபன் பற்றிப் பேசும் படி, நாம் அதனை கணக்கில் எடுக்கவில்லை, நீதியமைச்சர் மொஹமட் அலி சப்றி எனது நண்பன் என்ன உதவியானாலும் நீங்கள் அவரின் ஊடாக என்னைத் தொடர்பு கொள்ளளாம் என மேலும் சுமந்திரன் தெரிவித்ததாக அவ் ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.