புதினங்களின் சங்கமம்

விஜயகலா அடியாளான யாழ் மாநகரசபை பீயோன் தனது கடமைநேரத்தில் நல்லுார் பிரதேசசபை செயலாளர் மீது கடும் தாக்குதல்!!

நல்லுார் பிரதேசசபை செயலாளர் சுதர்சன் மீது யாழ் மாநகரசபை பீயோன் கடும் தாக்குதலை மேற்கொண்டுள்ளார். துர்க்கா என அழைக்கப்படும் துஜிந்திரதாஸ் என்பவனே இவ்வாறு தாக்குதலை மேற்கொண்டவனாவான். நல்லுார் அரசடிப்பகுதியைச் சேர்ந்த குறித்த பியோனின் பதவி சாரதிப்பதவியாகும். குப்பைகள் ஏற்றும் உழவு இயந்திரச்சாரதியான இவன் முன்னாள் ஆணையாளராக இருந்த பிரணவநாதனை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து பூங்கா மேற்பார்வையாளராக கடமையாற்றி வந்தான். ஆனாலும் அங்கு கடமையை மேற்கொள்ளாது நகரப்பகுதியில் உள்ள நடைபாதை வியாபாரிகளுக்கு மீற்றர் வட்டி கொடுக்கும் செயற்பாட்டை செய்து வந்தான். அத்துடன் விஜயகலாவின் பிரத்தியோக ஆதரவாளராகவும் இருந்துவந்தான்.

ஒரு சாரதி எவ்வாறு பூங்காமேற்பார்வையாளராக இருக்க முடியும் என ஏனைய சாரதிகள் போர்க்கொடி துாக்கிய போது பொய் மருத்வச் சான்றிதழை மாநகரசபை ஆணையாளருக்கு சமர்ப்பித்துள்ளான். ஆணையாளருக்கு அது பொய் மருத்துவ சான்றிதழ் எனத் தெரிந்தும் அவனை தொடர்ந்து பூங்கா மேற்பார்வையாளராக கடமையாற்ற வைத்தார். இதன் பின்னரும் சாரதிகள் கடும் அழுத்தம் கொடுத்த போது யாழ் மாநகரசபை ஆணையாளர் அவனுக்கு சாரதி வேலையைக் கொடுக்காது வேலைத்தளப்பகுதியில் அவனுக்கு சொகுசான முறையில் பதவியைக் கொடுத்து தனது தனிபட்ட வேலைகளுக்கும் பயன்படுத்தி வந்துள்ளார்.

இந் நிலையில் இன்று வேலைக்கு வந்த துர்க்கா வேலைத்தள மேற்பார்வையாளருடன் ஒரே மோட்டார் சைக்கிளில் வெளியே சென்றுள்ளான். இது தொடர்பான விசாரணைக்காக கண்காணிப்பு் கமராக்களையும் அவதானிக்க முடியும். அதன் பின்னரே நல்லுார் பிரதேசசபை செயலாளார் மீது தாக்குதல் மேற்கொண்டுள்ளான். இவன் வேலைக்கு வந்தது தொடர்பாக அணைத்துக் கண்காணிப்புக்கமராக்களிலும் பதிவு உள்ளது. தற்போது இவன் கடமையில் இல்லாது லீவு எடுத்துள்ளதாகவும் மாநகரசபை ஆணையாளர் கதையைப் புரட்டியுள்ளார். இவன் லீவு எப்போது எடுத்தான், லீவு அனுமதிக்கப்பட்டதா,, கைரேகை விரலடையாளம் வைத்தானா, என்பது தொடர்பாக நீதிமன்றம் கவனத்தில் எடுக்க வேண்டும் என யாழ் மாநகரசபை சாரதிகள் கருது்துத் தொிவித்துள்னர்,

யாழ் மாநகரசபை ஆணையாளரும், பிரதி ஆணையாளர் சீராளனும் தங்கள் விடும் தவறுகள் தொடர்பான செய்திகள் ஊடகங்களில் வந்தால் தமது ஊழியர்களை பொலிசாரை வைத்து அச்சுறுத்தி வருவதும் குறிப்பிடத்தக்கது.