Vampan memesபுதினங்களின் சங்கமம்

சசிகலாவை வைத்து சாவகச்சேரி தொகுதி மக்களிடம் பேக்கரி டீலிங் நடாத்திய சுமந்திரன்!!

சசிகலாவை வைத்து சாவகச்சேரி தொகுதி மக்களிடம் பேக்கரி டீலிங் நடாத்திய சுமந்திரன்!!

சுமந்திரன் பாராளுமன்றத் தேர்தலில் வென்றது மற்றவர்களுக்கு எப்படியோ தெரியாது எனக்கு கடும் வெப்பியாரமாகத்தான் இருந்தது. அந்த வெப்பியாரம் இன்று இரவுவரையும் இருந்தது. ஆனால் என்னைப் போலவே கனபேர் இருந்திப்பார்கள் என்றும் தெரியும். உண்மையில் தேர்தல் வாக்கு எண்ணும் நிலையத்தில் கடமையில் இருந்த என்னைப் போலவே சுமந்திரன் எதிர்ப்பாளர்களான பல நண்பர்கள் கூறியதை இங்கு தந்துள்ளேன். இது நண்பர்கள் சொன்ன பதில் மாத்திரமே. உண்மைகள் கடவுளுக்குத்தான் வெளிச்சம்….

தேர்தல் வாக்கெண்ணும் நிலையத்தில் கடமையாற்றிய குறிப்பிடத்தக்க நட்பான அதிகாரிகள், நண்பர்களின் கருத்துப்படி சசிகலா நியாயமான முறையிலேயே தோற்கடிக்கப்பட்டதாக கூறுகின்றார்கள்.

சித்தார்த்தனுக்கு கோப்பாய் தொகுதியில் பெருமளவு வாக்குகள் விழுந்ததால் சித்தார்த்தன் 3ம் நிலைக்கு வந்துள்ளார். இல்லாவிட்டால் சசிகலாவே வென்றிருப்பார் என்று உறுதியான தகவல்கள் தெரிவிக்கின்றன.மானிப்பாய் தொகுதியிலும் சித்தார்த்தனுக்கும் சுமந்திரனுக்கும் குறிப்பிடத்தக்க வாக்குகள் விழுந்துள்ளன. சுமந்திரனுக்கு விழுந்த வாக்குகள் நியாயமானவை என குறிப்பிடுகின்றார்கள். வாக்கெண்ணும் நிலையத்தில் எந்தவித மோசடிகளும் நடக்க வாய்பில்லை என்று விளக்கப்படுத்தினார்கள். அத்துடன் தற்போது ஒன்லைனில் கணனிமயப்படுத்தப்பட்டுள்ளதால் உடனுக்குடன் அப்டேட் நடப்பதாகவும் தெரிவித்தார்கள்.

அதே நேரம் முன்னைய காலங்களில் தேர்தல் நடவடிக்கையில் ஈடுபட்ட முக்கிய அதிகாரியான நண்பன் நான் கேட்ட சில கேள்விகளுக்கு கோபத்துடன் சிலவற்றை எனது இன்னொரு வைபர் குழுவில் குறிப்பிட்டார். அற்றை இங்கு தருகின்றேன்.
மேற்கோள் குறிக்குள் அவர் தந்த பதில்கள் மட்டுமே இங்கு போட்டுள்ளேன்.. வாசித்துப் பார்க்கவும். குறிப்பு – எனக்குக் கேள்விமட்டும்தான் கேக்க தெரியும்…..

“இலங்கையில் நீங்கள் யாருக்கு புள்ளடி போடுகின்றீர்கள் என்பது மட்டும் தான் தேர்தலில் இரகசியம். மற்ற எல்லாம் எல்லாரும் பார்க்க பலர் முன்னிலையில் நடைபெறும். எதுவும் பிழையாக நடைபெறாது. அங்கு அலுவலர் மட்டும் இல்லை கட்சிகளின் பிரதிநிதிகளும் இருப்பார்கள்.”

”JHC இல் முதலாம் பிள்ளை இரண்டாம் பிள்ளை எப்பிடி வாறதென்டு பாருங்க. பாட புள்ளிகள் எப்பிடி தீர்மானிக்கின்றன”
எல்லா குழப்பமும் உன்னை மாதிரி கேள்விச்செவியன்களால் தான்.”

“நேரம் செல்ல செல்ல முடிவுகள் வர தாமதமாவது ஏனெனில் இங்குள்ள result preparation center la இருந்து கொழும்புக்கு fax பண்ணி confirm பண்ணிய பின் தான் இங்கு declare செய்யலாம். ஒரு கட்டத்தில் இலங்கையின் எல்லா மாவட்டத்தில் இருந்தும் ஒரே நேரத்தில் செல்ல தொடங்க தாமதம் வரும். இதெல்லாம் விளங்காம”

“I was in the declaration for many elections. சிலவேளைகளில் பதிலுக்காக காத்திருக்க வேண்டும் மணித்தியாலமாக. ஏதோ நாங்க நினைக்க கூடாது இங்க மட்டும் தான் தாமதம் என்று இல்லை.”

“ஒரு மாவட்டத்திலும் இல்லாத புதுக்கதைகள் இங்க தான் வாறது எல்லாம் அரைகுறை விளக்கத்தோட”

“Fax அனுப்பிற்று காத்திருக்க வேண்டும். அதனோடு முடிவுகளை வெளியிடும் போது கலவரம் குழப்பம் வராத மாதிரி பக்குவமாக வெளியிட வேண்டும்.”

“இது you tube இல் பார்த்து செய்யிறேல”

“சுமந்திரனுக்கு 4000 வாக்குகள் கூட என நினைக்கின்றேன். இவ்வளவு வாக்குகளையும் எப்பிடி மாத்திறது என்ற அடிப்படை சிந்தனை கூட இல்லையா படித்த மாவட்டத்தில்”

“ஏன் முதல் மணி தான் முன்னிலை என்றும் அருந்தவபாலன் தான் முன்னிலை என்றும் வந்தது. எப்பிடி அவர்கள் பின்னுக்கு போனார்கள். மோசடியா? அவர்களுக்கு என்றால் தக்காளி”

“சசிகலா சாவகச்சேரியில் தான் முன்னிலை|”

“கிளிநொச்சி தாமதமாக வந்தது. அங்கு சுமந்திரன் கணிசமாக பெற்றார்”

“அப்ப விக்கி அருந்தவபாலனை வென்றது எப்பிடி?”நாங்கள் யதார்த்தம் கதைக்க வேண்டும். எங்களுக்கு கடமையை பொறுத்த வரை யார் வந்தா தான் என்ன. எங்களின் கடமை மக்களின் தீர்ப்பை வெளியிடுதல்”

“என்னை ஒரு வேட்பாளர் கேட்டார் எப்பிடி சரியாக 7000 வாக்கு தனக்கு கிடைத்த என்று?”

“ஒருமுறை தேர்தலில் இரவு 1.30 கு எல்லாம் முடிந்தது . ஆனால் நாங்கள் final declaration செய்யும் போது அடுத்த நாள் மதியம் 12.30. During Ganesh GA time.”

“அப்ப அதன் விளக்கம் தெரிந்தா சரி”

”ரணிலும் தோற்றுப்போனார் 42 வருசத்தில. அப்ப மோசடியா”

இவ்வாறு தொடர்ந்து பொரிந்து தள்ளிக் கொண்டு இருந்தார். அதுக்குப் பிறகுதான் நான் யோசிச்சுப் பார்த்தன்…. வடிவேலுவுக்கு பேக்கரியைக் கொடுத்து அக்காவை வைத்திருப்பது போல சசிகலாவை காட்டி சாவகச்சேரிச் சனத்திட வாக்குகளை சுமந்திரன் வாங்கிப் போட்டார்.

அருந்தவபாலனின் வாக்கு வங்கியை அடித்து உடைப்பதற்கு சசிகலா என்ற ஒரு கருவி சுமந்திரனால் பாவிக்கப்பட்டுள்ளது. உண்மையில் சசிகலா சுமந்திரனின் தந்திரத்தை அறியாமல் தேர்தலில் இறங்கியிருந்தால் அவர் அரசியலுக்கு பொருத்தமில்லாதவர். இனிமேல் அவருக்கு அரசியல் தேவையில்லை…. அவர் பாராளுமன்றம் போயும் எதுவும் செய்யப் போவதும் இல்லை.

நன்றி

Vasantharuban Thanapalasingam 

FB