ஊரடங்கு நேரத்தில் வாழைப்பழங்கள் விற்பனை செய்தவர் கோப்பாய் பொலிசாரால் கைது செய்யப்பட்டு பின்னர் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
அவருக்கு எதிரான வழக்கு யூலை மாதத்துக்கு பிற்போடப்பட்டுள்ளது.
இது தொடர்பாக முகப்புத்தம் ஒன்றில் வந்த நகைச்சுவைப் பதிவு இங்கு தரப்பட்டுள்ளது.
அவரிடமிருந்து மீட்கப்பட்ட சான்று பொருளாக குறிக்கப்பட்டுள்ள இந்த வாழைக்குழை யூலை மாதம் வரை இருக்க வேண்டிவருமே என கண்ணீர் விட்டு அழத் (அழுகத்) தொடங்கியுள்ளது.
மன்றின் அனுமதியின்றி சான்று பொருளை பொலிஸாரால் அழிக்க முடியாது. ஊரடங்கு நேரத்தில் இவ்வாறான வியாபாரிகள் செய்யும் அலங்கோலங்களால் வாழைக்குலைகள் உட்பட்ட விவசாய உணவு உற்பத்தி பொருட்கள் வியாபாரிகளை பெரும் விசனத்துடன் எதிர்ப்பதாகத் தெரியவருகின்றது.






