யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளைஞன் சிங்கப்பூரில் பொறியிலாளராக இருந்து பின்னர் அவுஸ்ரேலியா சென்று மேலதிக கற்கையை பயின்று வந்ததாகவும் கடந்த மாதம் தான் சிங்கப்பூருக்கு போகவுள்ளதாக தனது தாயாருக்கு தெரிவித்த பின்னர் குறித்த பொறியியலாளரின் தொடர் இல்லாது போயுள்ளதாக தாயார் கடும் சோகத்தில் உள்ளதாகத் தெரியவருகின்றது. தற்போது கொழும்பில் தனது மூத்த மகளுடன் தங்கியுள்ள தாயார் இது தொடர்பாக வெளிநாட்டு அமைச்சை தொடர்பு கொள்ள இருப்பதாகவும் தெரியவருகின்றது. மகன் கதைத்த போது இருமலுடன் சாதுவான காய்ச்சலும் இருப்பதாக தாயாருக்கு தெரிவித்திருந்தார். அடுத்த நாள் அவர் சிங்கப்பூர் செல்வதற்கு இருந்ததாகவும் அதன் பின்னர் அவரது வைபர் தொலைபேசி இணைப்பு செயற்படவில்லை எனவும் தாயார் கவலை தெரிவித்துள்ளார். மகனது பேஸ்புக் கணக்கு 3ம் மாதம் 19ம் திகதிக்குப் பின்னர் எந்தவித பதிவுகளுமின்றி இருப்பது குறிப்பிடத்தக்கது.
தனது தாயார் தனக்கு வைரஸ் தொற்று என அறிந்தால் கடுமையாக ஏக்கமடைந்துவிடுவார் என மகன் நினைத்து எந்தவித தொடர்பும் இல்லாது இருக்கலாம் எனவும் சந்தேகம் எழுந்துள்ளது.





