Home புதினங்களின் சங்கமம் சாராயக்கடைகளுக்கு தொடர்ந்து ஊரடங்குச் சட்டம்!! நீண்ட நாட்களுக்கு திறக்க வாய்ப்பில்லையாம்!!

சாராயக்கடைகளுக்கு தொடர்ந்து ஊரடங்குச் சட்டம்!! நீண்ட நாட்களுக்கு திறக்க வாய்ப்பில்லையாம்!!

பொலிஸ் ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்படும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து மதுபான சாலைகளும் மூடப்பட வேண்டும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு உத்தரவிட்டுள்ளது.

அத்துடன் விவசாயம் செய்யும் மாவட்டங்களில் விவசாயிகளுக்கு தங்களுடைய கடமைகளை செய்து கொள்வதற்கு இடமளிக்குமாறு அரசாங்கம் பொலிஸாரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

அத்தியவசிய பொருட்கள் தேவையான அளவு களஞ்சியப்படுத்த பட்டுள்ளதால் மக்கள் தேவையற்ற விதத்தில் அச்சப்பட தேவையில்லை எனவும் அரசாங்கம் மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.