யாழ்ப்பாணம் ஊர்காவற்றுறை – சின்னமாடு, மூன்றாம் வட்டாரப் பகுதியில், போதையில் குழந்தையைத் தூக்கி வீசிய நபரை, 14 நாள்கள் விளக்கமறியலில் வைக்க , ஊர்காவற்றுறை நீதிவான் நீதிமன்றம், இன்று உத்தரவிட்டுள்ளது.
மதுபோதையில் தனது உறவினர் ஒருவரின் வீட்டுக்கு சென்ற குறித்த நபர் , அங்கு உறங்கிக்கொண்டிருந்த குழந்தையை தூக்கியுள்ளார்.
அதனை அவதானித்த உறவினர்கள், குறித்த நபரை ஏசியதால் ஆத்திரமடைந்த அந்த நபர், குழந்தையைத் தூக்கி வீசி விட்டு அங்கிருந்து சென்றுள்ளார்.
இந்நிலையில் அவர் வீசியதால் காயமடைந்த குழந்தை, ஊர்காவற்றுறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டது.
இதையடுத்து, சம்பவத்துடன் தொடர்புடைய நபர், ஊர்காவற்றுறைப் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்ட நிலையில் ஊர்காவற்றுறை நீதிவான் நீதிமன்றம் குறித்த உத்தரவை பிறப்பித்துள்ளது.





