என்ன சிம்ரன் இதெல்லாம்..! மிகவும் மோசம் – வைரலாகும் புகைப்படம்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்தவர் நடிகை சிம்ரன். விஜய், அஜித், பிரபு தேவா என பல தமிழ் சினிமாவின் முன்னணி நடிக்கற்களுடன் நடித்துள்ளார் நடிகை சிம்ரன்.
மிக அதிகமான ரசிங்கர்களை கொண்ட கதாநாயகியும் கூட. மேலும் இடுப்பழகி சிம்ரன் என்று எல்லோராலும் அழைக்கப்பட்டார் நடிகை சிம்ரன். தமிழ் சினிமாவையும் தாண்டி தென்னிந்திய சினிமாவிலும் கொடி கட்டி பறந்து வந்தார்.
கிட்டத்தட்ட அனைத்து முன்னணி நடிகர்களுடன் கைகோர்த்து நடித்த நடிகை சிம்ரன் புதுமுகங்கள் வருகையாலும், வயது காரணமாகும் புறக்கணிக்கப்பட்டார். இதனால், திருமணம் செய்து கொண்டு செட்டிலானார் அம்மணி. குழந்தை குட்டி என்று ஆனத்துக்கு பிறகு மீண்டும் சினிமாவில் நடிக்க வந்தார்.
ஆனால், இளமை காலத்தில் கிடைத்த வாய்ப்புகள் போல கிடைக்க வில்லை. திரிஷா இல்லனா நயன்தாரா, சீமராஜா, பேட்ட போன்ற படங்களில் நடித்து ரசிகர்களுக்கு நான் திரும்பி வந்துவிட்டேன் என்று கூறினார்.
இந்நிலையில், சர்ச்சை நாயகி மீராமிதுனுடன் சிம்ரன் இருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியானது. இதனை பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள் என்ன சிம்ரன் இதெல்லாம்,,,! அது மிகவும் மோசமான மிருகம் என்று கலாய்த்து வருகிறார்கள்.


