புதினங்களின் சங்கமம்

யாழ் பல்கலைகழக தொழில்நுட்ப பீட சிற்றுண்டிச்சாலை உணவில் புழுக்கள் (Video)

யாழ்ப்பாண பல்கலைகழகத்தின் கிளிநொச்சி தொழில்நுட்ப பீடத்தின் சிற்றுண்டிச்சாலையில் வழங்கப்பட்ட காலை உணவில் புழுக்கள் காணப்பட்ட அதிர்ச்சி சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இன்று (4) காலை உணவில் வழங்கப்பட்ட சம்பலில் புழுக்கள் காணப்பட்டுள்ளன.

பல மாணவர்கள் உணவருந்தி முடித்த நிலையில், காலை 9 மணியளவிலேயே உணவில் புழு இருந்தது மாணவர்களால் கண்டுபிடிக்கப்பட்டது. குளிர்சாதன பெட்டிக்குள் வைக்கப்பட்ட பழைய சம்பல் அது என தெரிவிக்கப்படுகிறது.