புதினங்களின் சங்கமம்

யாழ்ப்பாணம் சுண்டிக்குளம் பகுதியில் 88 கிலோ கஞ்சாவுடன் ஒருவர் கைது!! (Photos)

சுண்டிக்குளம் பகுதியில் சுமார் 80 கிலோ எடையுடைய கஞ்சா போதைப்பொருளுடன் அந்தப்
பகுதியைச் சேர்ந்த ஒருவர் பளை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கஞ்சா கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்பட்ட படகு ஒன்றும் அதற்கான இயந்திரம் மற்றும்
மோட்டார் சைக்கிள் என்பனவும் சந்தேகநபரிடமிருந்து கைப்பற்றப்பட்டதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

இந்தச் சம்பவம் இன்று மாலை இடம்பெற்றது.

சுண்டிக்குளம் பகுதியைச் சேர்ந்த 40 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டார் என்று
பளைப் பொலிஸார் தெரிவித்தனர்.

சுமார் 80 கிலோ கிராம் எடையுடைய 40 கஞ்சா பொதிகள் சந்தேகநபரிடமிருந்து
கைப்பற்றப்பட்டன என்று பொலிஸார் கூறினர்.

சந்தேகநபர் பளை பொலிஸ் நிலையத்தில் தடுத்துவைக்கப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளார்.
அவர் நாளை கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் முற்படுத்தப்படுவார் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.