சமூக வலைத்தளத்தில் வந்த பதிவினை அப்படியே தந்துள்ளோம்.
இடப்பெயர்வின் போது உருத்திரபுர பெண்ணை திருமணம் செய்து, மீள் குடியேற்றத்தின் பின் ஊருக்குள் வந்தவன், சமரழகியின் அயல் வீட்டு காணியை வாங்கி குடியேறியிருக்கிறார்கள்.
ஒழுக்கமற்ற, நேர்மையற்ற, எப்போதும் நிறை வெறியில் திரியும் இவன், உள்ளூர் அரசியல்வாதி ஒருவனின் அல்லக்கை. எடுபிடி வேலைகள் செய்பவன். இவர்களோடு இன்னும் உருத்திரபுரத்தை சொந்த இடமாகக் கொண்ட மூவர் குடித்து கூத்தடிக்கும் வேலைகளில் ஈடுபடுபவர்கள்.
சமரழகியின் தந்தை சின்னக் கண்ணனின் வாக்குமூலத்தின் படி,
6 மாதங்களின் முன்னர் இந்த பாபு என்பவன், நிறை வெறியில் சமரழகியை பாலியல் ரீதியாக தாக்குவதற்கு முயற்சித்த நிலையில் தந்தையால் காப்பாற்றப்பட்டிருக்கிறாள்.
சமரழகியின் குடும்பத்தில், தந்தையான சின்னக் கண்ணன் உடல் வலுவற்ற நிலையிலிருப்பதையம், குடும்பம் பொருளாதார நலிவுற்ற நிலையிருப்பதையும், தாய் மற்றம் சகோதரர்கள் நோய்வாய்ப்பட்ட நிலையில் இருப்பதையும் சாதகமாகப் பயன்படுத்தியது மட்டுமன்றி, அந்தக் குடும்பத்தை, தான் அல்லக்கையாக செயற்படும் நபர்களை வைத்து கட்டுப்படுத்தலாம் என்ற நோக்கில் திட்டமிட்டு சமரழகி மீது பாலியல் தாக்குதல் செய்வதற்கு அப்பன் பாபுவும் மகன் அபிசனும் செயற்பட்டிருக்கிறார்கள்.
ஊருக்குள் நிகழ்ந்த மண்கடத்தல் மற்றும் அதன் தொடர்ச்சியில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவங்களின் இவனின் இரண்டு பிள்ளைகளுமே சமந்தப்பட்டிருக்கிறார்கள்.
இவனின் மூத்தவன் ஊற்றுப்புலம் பகுதியில் இடம்பெற்ற கொ*லையுடன் தொடர்புபட்டதன் அடிப்படையில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் இருந்து பிணையில் விடுவிக்கபட்டிருந்த நிலையில், கொழும்பு சென்று ஒரு பெண்ணை திருமணம் செய்து உருத்திரபுரத்தில் அதே வீட்டில் குடியேறியிருக்கிறான்.
பாபு என்ற ஓட்டுமாட்டு வெறியன் தொடர்பான அத்தனை விடையங்களும் பொலிசாரிடம் வழங்கப்பட்டு வழக்கு பதியப்பட்டு சிறையில் அடைக்கப்பட வேண்டும்.
பாபு – அபிசன் என்ற சமூகவிரோத, இரண்டு காமக் கொடூர்களும் சிறையில் அடைக்கப்படுவதற்கான அத்தனை ஆதாரங்கள் இருந்தும், இவர்களோடு கூடத்திரிந்தவர்கள், அல்லக்கையாக வைத்திருந்தவர்கள் ஒத்துழைப்பு வழங்காமல் பின்னடிப்பதனால், இவர்களால் உங்கள் குடும்பத்திற்கு ஏற்படப் போகும் இழுக்கிற்கு காரணமாகாதீர்கள்





