பாலக்குடாவில் கணவனை பிரிந்து வாழ்த 26 வயது இளம்குடும்பப் பெண் கர்ப்பம்! பொறுக்க முடியாத கணவன் அவளை கொன்றான்! தமிழர் பகுதியில் நடப்பது என்ன?
கற்பிட்டி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாலக்குடா பகுதியில், 26 வயதுடைய கர்ப்பிணிப் பெண் ஒருவர் கணவரால் தாக்கப்பட்டு உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்படும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குறித்த பெண் தனது கணவரைப் பிரிந்து, வேறொருவருடன் தனியாக வசித்து வந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
பிரிந்த கணவனுக்கும் பெண்ணுக்கும் இடையே நீண்டகாலமாக நிலவி வந்த குடும்பத் தகராறே இந்தச் சம்பவத்திற்குக் காரணமாக இருக்கலாம் என முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
பலத்த காயங்களுடன் கற்பிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட குறித்த பெண், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது கருவில் இருந்த குழந்தையும் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
சம்பவத்தையடுத்து விரைந்து செயல்பட்ட கற்பிட்டி பொலிஸார், சம்பவம் இடம்பெற்ற சுமார் 45 நிமிடங்களுக்குள் 36 வயதுடைய சந்தேகநபரை கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் ‘ஐஸ்’ போதைப்பொருளுக்கு தீவிரமாக அடிமையானவர் என பொலிஸார் தெரிவித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கற்பிட்டி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

