புதினங்களின் சங்கமம்

பெரியப்பாவின் மகனுடன் கள்ளக்காதல்! கழுத்தறுத்து கண்கள் பிடுங்கப்பட்டு 18 வயது தமிழ் யுவதி வத்தளையில் கொலை! வீடியோ

2026.09.03 அன்று வத்தளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இலக்கம் 81, டயர் லங்கா வீதி, பள்ளியவத்தை, வத்தளை எனும் முகவரியில் 18 வயதுடைய பெண் ஒருவர் கழுத்து அ#றுக்கப்பட்டு, கண்கள் தோண்டப்பட்டு படுகொ#லை செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபர்: வரதராஜா சந்திர தேவன், வயது 25, சென்ட் மார்கரெட் தோட்டம், இலக்கம் 6 லயன் அறை, உடப்புஸ்ஸல்லாவ.

கொ#ல்லப்பட்டவர் கடந்த ஐந்து வருடங்களாக தனது பெரியப்பாவின் மகனுடன் காதல் தொடர்பு வைத்துள்ளார். ஒரு வருடத்திற்கும் மேலாக இருவரும் ஒன்றாக வாழ்ந்து வந்துள்ளனர். இவர்கள் சட்டப்பூர்வமாக திருமணம் செய்து கொள்ளவில்லை. சந்தேகநபர் இறந்த பெண் மீது தொடர்ச்சியாக சந்தேகப்பட்டு வந்துள்ளார். இதன்போது ஏற்பட்ட தகராறில், வாடகை வீட்டில் இருந்தவேளை அவரை குளியலறைக்கு அழைத்துச் சென்று கத்தியால் கழுத்தை அறுத்து, கண்களைத் தோண்டி படுகொ#லை செய்துள்ளார்.

இக்கொ#லை தொடர்பில் பிரதான சந்தேகநபராக கருதப்படும் இவரிடம் வாக்குமூலங்களைப் பதிவு செய்ய வேண்டியுள்ள நிலையில், அவர் தற்போது தப்பிச் சென்றுள்ளார். இவரை அடையாளம் காண முடிந்தவரை தேடி உதவி செய்யுங்கள். தகவல் ஏதேனும் தெரிந்தால் அறிவிக்கவும்.
0773831577 (பொறுப்பதிகாரி – குற்றப் பிரிவு, வத்தளை)

இதே வேளை குறித்த நபர் சடலமாக மீட்கப்பட்டதாகவும் அவன் தற்கொலை செய்திருக்கலாம் என பொலிஸ்  தகவல்கள் வெளியாகியுள்ளன.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x