புதினங்களின் சங்கமம்

விடுதியில் தூக்கில் சடலமாக தொங்கிய பல்கலைக்கழக மாணவி யாழினி! நேரில் பார்த்த மாணவிகள் மயங்கிய நிலையில் மீட்பு!

மட்டக்களப்பு – கல்லடி பகுதியில் அமைந்துள்ள சுவாமி விபுலானந்த இசை நடனக் கல்லூரி விடுதியில் தங்கியிருந்த முதலாம் ஆண்டு மாணவி ஒருவர் இன்று (19) பிற்பகல் உயிரிழந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

திருக்கோவில், தம்பிலுவில் பகுதியைச் சேர்ந்த 20 வயதுடைய கே.யாழினி என்ற மாணவியே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இவர் கடந்த 3 மாதங்களுக்கு முன்னரே நாடகத்துறை கற்கைநெறிக்காக இக்கல்லூரியில் இணைந்துள்ளார்.

விடுதி அறையில் மாணவி உயிரிழந்த நிலையில் காணப்பட்டதைக் கண்டு அதிர்ச்சியடைந்த சக மாணவிகள் இருவர் மயங்கி விழுந்துள்ளனர்.

உடனடியாக ஏனைய மாணவர்கள் அவர்களை மீட்டு மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

தற்போது மயங்கி விழுந்த மாணவிகள் சிகிச்சை பெற்று வருவதாகவும், உயிரிழந்த மாணவியின் சடலம் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவம் குறித்து காத்தான்குடி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

“உதவி தேவைப்படுபவர்கள் இலங்கையின் தேசிய மனநல உதவி எண்ணான 1926 ஐத் தொடர்பு கொள்ளவும்.”

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x