குழந்தையை நடுவீதியில் விட்டு விட்டு கள்ளக் காதலனுடன் ஓடிய முஸ்லீம் குடும்பப் பெண்ணின் கணவனின் பரபரப்பு வாக்குமூலம்! வீடியோ
தன் சின்னக் குழந்தையை அடித்துத் தெருவில் விட்டுச் சென்ற “அம்மா” என்று அழைக்கப்படும் இந்த வஞ்சகப் பெண். குழந்தைக்கு எதிராக அவர்கள் செய்த குற்றத்திற்காக அவர்களுக்கு முறையான தண்டனை வழங்கப்பட வேண்டும். அந்தத் தண்டனையைப் பற்றி நாடு முழுவதும் தெரியப்படுத்த வேண்டும், அப்போதுதான் மீண்டும் இதுபோன்ற குற்றங்கள் நடக்காது
செய்தியும் பின்னணியும்
இலங்கையில் தான் பெற்ற குழந்தையை விட்டுவிட்டு கள்ளக்காதலனுடன் ஓடிய தாய்
ஆயிஷாவுக்கு நடந்தது ஒரு குழந்தையின் கதை மட்டும் அல்ல, இது முழு நாட்டிற்கும் விடுக்கப்பட்ட எச்சரிக்கை!
இந்தப் படத்தில் இருக்கின்ற தாய் தனது குழந்தையை அடித்து காயப்படுத்தி வத்தேகமும் பகுதியில் விட்டுவிட்டு கள்ளக்காதலனுடன் ஓடி சென்றுள்ளார் இவளை கண்டால் போலீசுக்கு அரிய தருமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
மாவனல்லையைச் சேர்ந்ததாகத் தெரிவிக்கப்படும் சிறுமி ஆயிஷா, வத்தேகம நகரப் பகுதியில் காயங்களுடன் மீட்கப்பட்ட நிலையில் கண்டி தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின் விசாரணைகளின் பின் தந்தையை அடையாளம் கண்ட பொலிஸார் அவரை அழைத்து விசாரித்த போது தனது மனைவி தனது மகளை கூட்டிக்கொண்டு சில நாட்களுக்குமுன் வெளியேறியதாகவும் அவருக்கு இன்னொரு ஆணொடு நெருக்கமிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
( நேற்று கண்டி வத்தேகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட யட்டிராவன பகுதியில் தாக்குதலுக்குள்ளான நிலையில் சிறுமி ஒருவர் முச்சக்கர வண்டியில் கொண்டுவரப்பட்டு வீதியில் இறக்கிவிடப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது )
அப்படிப்பட்ட ஒரு பச்சிளம் உயிர் காயங்களுடன் வீதியில் கிடக்கும் நிலை ஏற்பட்டிருக்கிறது என்றால், இதை வெறும் ஒரு நாள் செய்தியாகப் பார்த்துவிட்டு நாம் கடந்து செல்லக்கூடாது.
ஆயிஷாவுக்கு நடந்ததாக வெளியாகியுள்ள சம்பவத்தின் முழு உண்மையும் விசாரணையின் மூலம் வெளிவர வேண்டும். குற்றம் நிரூபிக்கப்படும் வரை யாரையும் குற்றவாளி என தீர்ப்பளிக்கக் கூடாது. ஆனால் குற்றம் நிரூபிக்கப்பட்டால் — சட்டம் தனது கடமையை செய்ய வேண்டும்.
ஆயிஷாவுக்கு நீதி வேண்டும்.
அனைத்து குழந்தைகளுக்கும் பாதுகாப்பு வேண்டும்.
குற்றத்திற்கு சட்டத்தின் மூலம் தண்டனை வேண்டும்.
குழந்தைகளுக்கு பாதுகாப்பான இலங்கை வேண்டும்.

