யாழில் மாணவிகளை புகைப்படம் எடுத்து தவறாக வடிவமைத்த தனியார் கல்வி நிலைய முதலாளியின் மகன்!!
யாழ் கோப்பாய் பகுதியில் அமைந்துள்ள தனியார் கல்வி நிலைய உரிமையாளரின் 17 வயதான மகன் குறித்த தனியார் கல்வி நிலையத்தில் கடந்த வருடம் ஓ.எல் வரை கற்று வந்த தனது வயதான பிரபல பெண்கள் பாடசாலை மாணவிகளை அதே கல்வி நிலையத்தில் வைத்தும் சுற்றுலா சென்று வந்த இடங்களில் வைத்தும் அவர்களுக்கு தெரியாது புகைப்படங்கள், வீடியோக்களாக எடுத்து அவற்றை தவறான முறையில் சித்தரித்து தனது மாணவ நண்பர்களின் வட்சப் இலக்கங்களுக்கு அனுப்பியுள்ளதாக அதிர்ச்சித் தகவலகள் வெளியாகியுள்ளன.
குறித்த மாணவன் யாழ் தனியார் கல்லுாரி ஒன்றில் தற்போது எ.எல் கற்று வருகின்றான். அவரது நண்பர்களின் வட்சப் குழு ஒன்றில் அவன் இவ்வாறான புகைப்படங்களை அனுப்பியுள்ளதுடன் அவன் அனுப்பிய புகைப்படங்களுக்கு பதிலீடாக அவனது நண்பர்களும் குறித்த வட்சப் குழுவில் வேவ்வேறு மாணவிகளின் புகைப்படங்களை தவறான முறையில் சித்தரித்து அனுப்பியுள்ளதாகத் பாதிக்கபபட்ட பெற்றோர்கள் சிலர் தெரிவித்துள்ளார்கள்.
இவனது இவ்வாறான நடவடிக்கை தொடர்பாக குறித்த பாடசாலை நண்பர்களிடம் அறிந்த இன்னொரு பிரபல பாடசாலையைச் சேர்ந்த மாணவர்கள் இவன் மீது தாக்குதல் நடாத்தியுள்ளதாகவும் தெரியவருகின்றது.
இவன் மீது தாக்குதல் நடாத்தியதற்காக இவனது தந்தையான ரியூசன் முதலாளி தாக்கியவர்கள் வீட்டுக்குச் சென்று அச்சுறுத்த முற்பட்ட போதே இவனது திருவிளையாடல்களை குறித்த மாணவர்கள் கூறியுள்ளார்கள். அதன் பின்னரே இவனால் புகைப்படம் எடுக்கப்பட்ட மாணவிகளின் பெற்றோருக்கு இது தொடர்பான தகவல்கள் கிடைத்துள்ளதாகத் தெரியவருகின்றது.
தற்போது இச் சம்பவம் மாணவிகளின் பாடசாலை மட்டத்திலும் குறித்த கல்விநிலையத்திலும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

