யாழில் இரட்டைச் சகோதரிகள் இருவர் தமக்கு தாமே தீ மூட்டி தவறான முடிவெடுத்து உயிரிழந்தனர்.
இதனையடுத்து தீ காயங்களுக்கு உள்ளான இருவரும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வரும்போது பலியாகினர்.
சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புன்னாலைக்கட்டுவன் பகுதியில் இந்த சம்பவம் நேற்று (02) இடம்பெற்றுள்ளது.
வாழ்வதற்கு விருப்பமில்லாத காரணத்தால் இவ்வாறு செய்ததாக அவர்கள் வாக்குமூலம் வழங்கியதாக தெரிவிக்கப்படுகிறது.
இது குறித்து மானிப்பாய் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.





