புதினங்களின் சங்கமம்

யாழ் இளைஞன் மட்டக்களப்பு நீதிமன்ற சிறைக்கூட்டுக்குள் செய்த செயலால் பெரும் பரபரப்பு!

மட்டக்களப்பில் பல திருட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த கைதியொருவர், மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற சிறைக்கூட்டினுள் பிளேடால் தனது கழுத்து மற்றும் கையை அறுத்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் நேற்று (20) பிற்பகல் 3.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

படுகாயமடைந்த அவர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து நீதிமன்ற வளாகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

நீதிமன்ற உத்தரவு
மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிரதான புகையிரத நிலையத்திற்கு முன்னாலுள்ள கடையொன்றில் 16,000 ரூபா பணம் திருடியமை மற்றும் மற்றுமொரு கடையை உடைத்து திருடியமை உள்ளிட்ட மூன்று திருட்டுச் சம்பவங்கள் தொடர்பாக குறித்த நபர் கடந்த வருடம் கைது செய்யப்பட்டிருந்தார்.

பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு பிணையில் வெளிவந்திருந்தார். பிணையில் சென்ற அவர், வழக்கு விசாரணைக்கு நீதிமன்றத்தில் சமூகமளிக்காமல் தலைமறைவாகியிருந்தமையால் அவருக்கு எதிராக நீதிமன்றத்தினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டது.

அதற்கமைய, கடந்த 13 ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் வைத்து யாழ் பொலிஸாரால் அவர் கைது செய்யப்பட்டார்.

பின்னர் கடந்த 15 ஆம் திகதி மட்டக்களப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, அவரை நேற்று (20) வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டதற்கிணங்க மட்டக்களப்பு சிறைச்சாலையில் அடைக்கப்பட்டிருந்தார்.

வழக்கு விசாரணைக்காக இன்று காலையில் சிறைச்சாலை அதிகாரிகளால் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்ட அவர், நீதிமன்ற சிறைக்கூடத்தில் வைக்கப்பட்டிருந்தார்.

அதனைத் தொடர்ந்து திறந்த நீதிமன்றத்தில் அவர் ஆஜர்படுத்தப்பட்ட போது, வழக்கை விசாரித்த நீதவான் அவரை எதிர்வரும் 3 ஆம் திகதி வரை மேலும் 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார். இந்த உத்தரவைத் தொடர்ந்து அவர் மீண்டும் நீதிமன்ற சிறைக்கூடத்தில் அடைக்கப்பட்டார்.

பாலில் தூக்க மாத்திரை, விஷப்பாம்பை வைத்து கணவரை கொன்ற பெண் ; தகாத உறவால் வந்த வினை
பாலில் தூக்க மாத்திரை, விஷப்பாம்பை வைத்து கணவரை கொன்ற பெண் ; தகாத உறவால் வந்த வினை
திறந்த நீதிமன்ற நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டிருந்த வேளையில், பிற்பகல் 3.00 மணியளவில் அங்கிருந்த மலசல கூடத்திற்குள் சென்ற குறித்த கைதி, சவரப் பிளேடால் தனது கழுத்தையும் கையையும் அறுத்து தற்கொலை செய்ய முயன்றுள்ளார். இதில் படுகாயமடைந்த அவர் உடனடியாக மீட்கப்பட்டு மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

தற்கொலைக்கு முயன்ற நபர் யாழ்ப்பாணம், காங்கேசன்துறை தையிட்டி பகுதியைச் சேர்ந்த 31 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இவருக்கு எதிராக மட்டக்களப்பில் மூன்று திருட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இச்சம்பவம் தொடர்பாக மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் மற்றும் தடயவியல் பொலிஸ் பிரிவினர் சம்பவ இடத்திற்கு வருகை தந்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டனர்.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x