பரத்தனில் இரவு நடந்தது என்ன? நடு வீதியில் எருமைமாடு போல் நின்று பலியானது யார்? வீடியோ இணைப்பு
யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த கார் பரந்தன் சந்திக்கு அண்மையில் நடுவீதியில் வாகனம் வருவது தெரிந்தும் அசையாமல் நின்ற 55 வயதான ஒருவர் மீது கார் மோதியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். குறித்த நபர் நிறை வெறியில் நின்றிருக்கலாம் என கருதப்படுகின்றது.
குறித்த விபத்து நேற்று இரவு 7.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது. விபத்தில் 55 வயதான புன்னைநீராவி கண்ணகிநகரைச் சேர்ந்தவரே உயிரிழந்துள்ளார். இறந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக கிளிநொச்சி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது . குறித்த சம்பவம் தொடர்பாக கிளிநொச்சி பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

