Home புதினங்களின் சங்கமம் கனடாவுக்கு அனுப்புவதாகக் கூறி மைத்துனனை மோசடி செய்தவன் தொடர்பாக விசாரணை!

கனடாவுக்கு அனுப்புவதாகக் கூறி மைத்துனனை மோசடி செய்தவன் தொடர்பாக விசாரணை!

இலங்கை, கனடா மற்றும் அவுஸ்திரேலியா போன்ற நாடுகளுக்கு வேலைவாய்ப்பு பெற்றுத் தருவதாகக் கூறி, பல கோடி ரூபாய் பண மோசடி செய்ததாக கூறப்படும் நபர் ஒருவரை கைது செய்வதற்காக திருகோணமலை விசேட குற்றப் புலனாய்வுப் பிரிவு விரிவான விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

தனது மைத்துனருக்கு கனடாவில் வேலை பெற்று தருவதாக கூறி, 9,742,600 ரூபாய் பணத்தை மோசடி செய்ததாக திருகோணமலை – சீனாவரம் பகுதியைச் சேர்ந்த ஒருவர் திருகோணமலை விசேட குற்றப் புலனாய்வுப் பிரிவில் முறைப்பாடு செய்திருந்தார்.

பயணத்தடை

குறித்த சந்தேகநபர் தொடர்பாக பெறப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில், கிண்ணியா நீதவான் நீதிமன்றத்தில் விடயங்கள் சமர்ப்பிக்கப்பட்டன.

இதனையடுத்து, சந்தேகநபருக்கு எதிராக நீதிமன்றம் அழைப்பாணை பிறப்பித்துள்ளதுடன், வெளிநாட்டு பயணத்தடையையும் விதித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

நீர்கொழும்பு மற்றும் மொரட்டுவ பகுதிகளை சேர்ந்த 47 வயதுடைய ஒருவருக்கே இவ்வாறு வெளிநாட்டு பயணத்தடை விதிக்கப்பட்டுள்ளது.