மோட்டார் சைக்கிள் விபத்தில் ஜதுர்ஷன் உயிரிழப்பு! Video
ஈச்சிலம்பற்று பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புன்னையடி பகுதியில் இன்று (01) இரவு இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இலங்கைத்துறை முகத்துவாரத்தில் இருந்து புன்னையடி நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து பாதையை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியதில் முத்துச்சேனையைச் சேர்ந்த 21 வயது ஜமனராஜ் ஜதுர்ஷன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இச்சம்பவம் இன்று (01) இரவு சுமார் 9.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
மேலதிக விசாரணைகளை ஈச்சிலம்பற்று பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.





