புதினங்களின் சங்கமம்

மொரஹெல பகுதியில் இன்று காலை ஏற்பட்ட மற்றுமொரு மண் சரிவு ! வீடியோ

மீகஹகிவுல பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட மொரஹெல – மீகொல்ல பகுதியில் மண் சரிவு ஒன்று இன்று (10) அதிகாலை மீண்டும் ஏற்பட்டுள்ளது. இந்த மண் சரிவினால் உயிரிழப்புகள் அல்லது சொத்துச் சேதங்கள் எதுவும் பதிவாகவில்லை என மீகஹகிவுல பிரதேச செயலாளர் நிர்மலா குமுதுனி தெரிவித்தார்.
இதற்கிடையில், பதுளை – மஹியங்கனை பிரதான வீதியின் பல இடங்களில் மண் மேடுகள் இடிந்து விழுந்ததால், போக்குவரத்து ஒரே வழித்தடத்திற்கு மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. பதுளை மற்றும் கந்தகெட்டிய இடையே இவ்வாறு மண் மேடுகள் சரிந்து விழுந்துள்ளதுடன், அவற்றை அகற்றும் பணிகளை வீதி அபிவிருத்தி அதிகாரசபை மேற்கொண்டு வருகிறது. எனினும், இந்த வீதியில் பயணம் செய்யும் போது மிகுந்த அவதானத்துடன் வாகனம் செலுத்துமாறு பொலிஸார் சாரதிகளுக்கு அறிவுறுத்தியுள்ளனர்..
May be an image of mountain and fogMay be an image of mountain and fogMay be an image of one or more people, motorcycle, fog and road