புதினங்களின் சங்கமம்புலம்பெயர் தமிழர்

கிளிநொச்சி போவதாக கூறி கனடாவிலிருந்து இலங்கை சென்ற சுரேஸ் கள்ளக்காதலியுடன் எஸ்கேப்பா? கதறுகின்றார் மனைவி ரேணுகா!

சமூகவலைத்தளத்தில் வந்த பதிவினை அப்படியே தந்துள்ளோம்.

கிளிநொச்சி, இராமநாதபுரம், கல்மடுநகர் 569, 7ஆம் யூனிற் பகுதியில் வசித்து வந்தவரும் தற்போது கனடா ஒன்ராறியோ மாநிலம் ஸ்காபரோவில் வசித்து வருபவருமான சுரேஸ் என அழைப்படும் சுப்பிரமணியம் – காந்தராஜா எனும் நபரை காணவில்லை.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

சுரேஸ் எனும் 48 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தையான இவர் கடந்த 17.11.2025 அன்று இரவு கனடாவிலிருந்து இலங்கைக்குப் போவதாகக் கூறி புறப்பட்டுள்ளார், எனினும் அதன் பிற்பாடு அவரிடம் இருந்து எந்தத் தகவலும் இல்லை எனவும் அவரது மனைவி எத்தனையோ தடவை தொடர்புகொள்ள முயற்சித்தும் தொடர்புகொள்ள முடியவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில் அவருக்கு என்ன நேர்ந்தது என்று தெரியவில்லை எனவும் அவரைத் தேடிக் கண்டுபிடித்துத் தருமாறும் அவரது மனைவியான ரேணுகா  அவசர உதவி கோரியுள்ளார்.