முல்லைத்தீவு பொலிஸ் அதிகாரியான பச்சைக் காவாலி றொட்றிகோ ஐஸ் போதைப் பொருளுடன் பிடிபட்டது எப்படி?
சமீபத்தில் ஒட்டுசுட்டான் போக்குவரத்து பொலிஸ் ஓ.ஐ.சி றொட்றிகோ மீது பல குற்றாச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்ட நிலையில் அது தொடர்பாக நாம் பதிவிட்ட செய்தியை தொடர்ந்து அவர் உடனடியாக வெலிஓயாவிற்கு இடமாற்றம் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் குறித்த பொலிஸ் அதிகாரி நேற்றிரவு பெருந்தொகையான ஐஸ் போதைப்பொருளுடன் மன்னாரில் வைத்து விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவர் மீது ஏற்கனவே பொய் வழக்கு பதிவு செய்தல், போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடுபவர்களுக்கு உடந்தையாக செயற்படுதல், இலஞ்சம் பெறுதல் போன்ற பல குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்ட நிலையில் தற்பொழுது அது நிரூபிக்கப்பட்டுள்ளது.
எனவே குறித்த பொலிஸ் அதிகாரி மீது உயரதிகாரிகள் உடனடியாக சட்டநடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் சார்பாகவும் கோரிக்கை விடுக்கின்றோம்.
தற்பொழுது ஒட்டுசுட்டான் பகுதியில் போக்குவரத்து பொலிஸாக கடமையாற்றும் நவநீதன் எனும் பொலிஸ் அதிகாரி மீதும் பல குற்றச்சாட்டுக்கள் வந்த வண்ணம் உள்ளன. மிக விரைவில் அவர் தொடர்பான தகவல்களும் வெளியிடப்படும். குற்றத்தை அம்பலப்படுத்துவோம் குற்றமற்ற நாட்டை உருவாக்குவோம்.



