மட்டு’வில் 6 வயதான பேத்தியை வல்லுறவுக்குள்ளாக்கிய தாத்தா!! துவைத்தெடுத்த பொதுமக்கள்!!

மட்டக்களப்பு மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கிரான்குளம் பகுதியில்
ஆறு வயது சிறுமியை துஸ்பிரயோகம் செய்தவரை காத்தான்குடி பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

நேற்று காலை கிரான்குளம் கடற்கரைப்பகுதிக்கு சிறுமியை அழைத்துச்சென்று துஸ்பிரயோகம்
செய்த வேளையில் அப்பகுதியில் நின்றவர்களினால், சிறுமி மீட்கப்பட்டு வைத்தியசாலையில்
அனுமதிக்கப்பட்டார்.

தனது பேரப்பிள்ளையுடன் உறவுமுறையான குறித்த சிறுமியையும் முதியவர் கடற்கரைக்கு
அழைத்துச்சென்று இவ்வாறு துஸ்பிரயோகம் செய்ய முற்பட்டுள்ளார்.

சிறுமி மயக்கமுற்ற நிலையில் மீட்கப்பட்டு ஆரையம்பதி வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டு
அங்கிருந்து மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டதாக வைத்தியசாலை
தகவல்கள் தெரிவித்தன.

இதேநேரம் துஸ்பிரயோகம் செய்ததாக சந்தேகிக்கப்படும் நபர் பொதுமக்களினால் பிடிக்கப்பட்டு
நையப்புடைக்கப்பட்ட பின்னர், காத்தான்குடி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன் இது
தொடர்பான விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.

error

Enjoy this blog? Please spread the word :)