புதினங்களின் சங்கமம்

ஊர்காவற்துறை மண் கடத்தல் லொறியை யாழ் அரசஅதிபர் தலையிட்டு விடுவிக்க முற்பட்டாரா?

ஊர்காவற்துறைப் பகுதியில் மண் கடத்தலில் ஈடுபடும் வாகனங்கள் உயரதிகாரிகளின் தலையீடு காரணமாக பொலிசாரால் விடுவிக்கப்பட்டதாக நேற்று யாழ் செயலகத்தில் நடந்த ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் சுட்டிக்காட்டிப்பட்டது. இதன் போது பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா ”மண்கடத்தில் ஈடுபடும் வாகனங்களை யாழ் அரசஅதிபரே பொலிசாருடன் தொடர்பு கொண்டு அந்த நடவடிக்கைகள் எடுக்க வேண்டாம் என கூறி தடுக்கின்றார் என பொதுமக்கள் எனக்கு ஆதாரங்கள் இல்லாமல் தெரிவிக்கின்றார்கள்” என குறுக்கிட்டு கூறியிருந்தார். இதனையடுத்து யாழ் அரச அதிபர் பிரதீபன் அதற்கு மறு்பபு தெரிவித்து கருத்து கூற முற்பட்ட போது இடையில் குறுக்கிட்ட அர்ச்சுனா எம்.பி ”நான் சொன்னது ஆதாரம் இல்லாமல் பொதுமக்கள் கூறுகின்றார்கள் என்று மட்டுமே. வேணுமென்றால் அவர்களுடன் நான் கதைத்த தொலைபேசி உரையாடலை இங்கு வெளியிடவா” என கேட்ட போத அரச அதிபர் மௌனமானதாக தெரியவருகின்றது.