புதினங்களின் சங்கமம்

ஒட்டுசுட்டான் பாடசாலையில் தேன் கூடு கலைந்து மாணவர்களைக் கொட்டியது!! மாணவர்கள் உட்பட 63 பேர் வைத்தியசாலையில்!!

ஒட்டுசுட்டான் மகாவித்தியாலய பாடசாலை வளாகத்திற்குள் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை  பாடசாலை சென்ற மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் தேனீக்கள் குத்தியதில் ஆசிரியர்கள், மாணவர்கள் உட்பட 63 பேர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் மகாவித்தியாலய வளாகத்திற்குள் கட்டடம் ஒன்றில் தேன் கூடுஇருந்துள்ளது.

இந்நிலையில் இன்றைய தினம்  வலயமட்ட விளையாட்டு போட்டிகள் ஒட்டுசுட்டான் மகாவித்யாலய மைதானத்தில் இடம்பெற ஏற்பாடாகிய இந்நிலையில் திடீரென தேனீக்கள் கலைந்து பாடசாலை, மைதானத்தில் நின்றவர்களை துரத்தி குத்தியுள்ளது. இதனால் ஆசிரியர், மாணவர்கள் உள்ளடங்கலாக 63 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

May be an image of 6 people and fireMay be an image of 6 people and fireMay be an image of 9 peopleMay be an image of 5 people, ambulance and hospitalMay be an image of 3 people, ambulance, van, hospital and text that says "ALBULA BOMATEp MEDICALTEAMS INTERNAT MEDICAL MEDICALTEAMS TEAMS 성 AT TERNATIONAL ATIONAL. DONATED TO HEALTH UREINN NISSAN RANmG"