புதினங்களின் சங்கமம்

ஹபரணையில் இந்து ஆலயத்தை உடைத்து பேருந்து தரிப்பிடம் அமைப்பு!

ஹபரணையில் இந்து ஆலயத்தின் முன்பகுதி உடைக்கப்பட்டு பேருந்து தரிப்பிடம் அமைக்கப்பட்டுள்ளமை தமிழ் சமூகத்தவரிடையே பேரதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஹபரணையில் அமைந்துள்ள இந்து ஆலயத்தின் முன்பகுதி இடிக்கப்பட்டு அவ்விடத்தில் பேருந்து தரிப்பிடம் அமைக்கப்பட்டுள்ளது.

அத்தோடு, பக்தர்கள் ஆலயத்துக்குள் செல்லும் வழியும் மறிக்கப்பட்டு, அதற்குப் பதிலாக தடுப்பு சுவர் ஒன்று எழுப்பப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கையானது பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளதுடன் கடும் எதிர்ப்பும் தோன்றியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெரும்பான்மையினரின்
ஆதிக்க போக்கால் சிறுபான்மையினர் அடக்குமுறைக்குள்ளாகுவதாகவும் சமூக ஆர்வலர்கள் வெளிப்படையாக விமர்சித்து வருகின்றனர்.

இந்த சம்பவம் தொடர்பாக அதி காரபூர்வ விளக்கம் வழங்குமாறு அரசாங்கத்தையும், உள்ளூராட்சி அதிகாரிகளையும் மக்கள் கேட்டுள்ளனர்.

May be an image of 3 people, temple and text that says "ஹபரணையில் தொன்மையான இந்து ஆலயத்தினைப் பாதுகாக்க ஒன்றிணைவோம்!"