புதினங்களின் சங்கமம்

அதி வேகம்!! யாழ் வல்லைப் பாலத்துக்குள் குதித்துப் புரண்ட டிப்பர் (Video)

யாழ்ப்பாணம் – பருத்தித்துறை பிரதான வீதியின் வல்லைப் பாலத்துக்கு அருகில் டிப்பர் வாகனம் ஒன்று வேக கட்டுப்பாட்டை இழந்து தடம்புரண்டு விபத்துக்குள்ளானது.
இந்தச் சம்பவம் இன்று அதிகாலை 1:25 மணியளவில் இடம்பெற்றதாக அச்சுவேலி பொலிஸார் தெரிவித்தனர்.
இதன்போது விஸ்வமடு பகுதியைச் சேர்ந்த டிப்பர் வாகனத்தின் 27 வயது உடைய சாரதி காயங்களுக்கு உள்ளான நிலையில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
வடமராட்சிப் பகுதியில் மண் பறித்து மீண்டும் திரும்பிக்கொண்டிருந்த போது இரண்டு டிப்பர் வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று முந்திச்செல்ல முற்பட்டபோது இந்த வாகனம் வேகக்கட்டுப்பாட்டை இழந்து தடம்புரண்டது என்று அச்சுவேலி பொலிஸார் தெரிவித்தனர்.