மத்திய சுகாதார அமைச்சில் இருந்து வந்த கடிதத்துக்கு அமைவாக சாவகச்சேரி ஆதார வைத்தியசாலை பொறுப்பதிகாரியாக கடமையாற்றிய அர்ச்சுனா வைத்தியசாலையிலிருந்து இன்று இரவு வெளியேறுவார் என மாகாணசுகாதார அமைச்சு தகவல்களின்படி தெரியவருகின்றது. அவர் வைத்தியசாலையிலிருந்து வெளியேறாவிட்டால் பொலிசாரைக் கொண்டு அவரை கைது செய்து நீதிமன்றில் ஆயராக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. சாவகச்சேரி வைத்தியசாலையை விட்டு அர்ச்சுனாவை உடனடிாக வெளியேறுமாறு மத்திய சுகாதார அமைச்சு கடிதம் அனுப்பியுள்ளதாகத் தெரியவருகின்றது. அத்துடன் அர்ச்சுனாவுக்கு பல வழக்குகள் போடப்படவுள்ளதாகவும் சமூகவலைத்தளங்களைப் பயன்படுத்தி அவர் பல தவறான செயற்பாடுகளை மேற்கொண்டுள்ளதாகவும் வடக்கு மாகாண சுகாதாரத்தரப்புக்கள் தெரிவித்துள்ளன.
Home புதினங்களின் சங்கமம் சாவகச்சேரி ஆதாரவைத்தியசாலை பொறுப்பதிகாரி அர்ச்சுனா இன்றிரவு வைத்தியசாலையிலிருந்து அகற்றப்படுகின்றார்!!





