வீட்டு அறைக்குள் கசிப்புக் காய்ச்சுவது எப்படி? யாழில் பிடிபட்ட இளைஞன்!!
யாழ்ப்பாணம் அச்சுவேலி பொலிஸாரால் 250 லிட்டர் கோடா மற்றும் 15 லிட்டர் கசிப்பு என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.
அச்சுவேலி வாகையடி பகுதியிலுள்ள வீடொன்றினுள் நேற்று(29) மாலை கசிப்பு உற்பத்தி இடம் பெறுவதாக பொலிஸாருக்கு இரகசிய தகவல் கிடைத்துள்ளது.
இதனையடுத்து அச்சுவேலி உதவி பொலிஸ் பொறுப்பதிகாரியும் குற்றத்தடுப்பு பிரிவின் பொறுப்பதிகாரியுமான பொலிஸ் பரிசோதகர் பால சூரிய தலைமையிலான பொலிஸ் கொஸ்தாபிள்களான ஆனந்தராஜ், இந்திக்க, விதுஷன், சமக்தா ஆகியோரின் சுற்றி வளைப்பில் குறித்த கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகையிடப்பட்டது. வீட்டின் அறை ஒன்றினுள் வைத்தே கசிப்பு உற்பத்தி நடைபெற்றுள்ளதாக தெரியவருகின்றது.
இதன்போது கசிப்பு உற்பத்திக்கு பயன்படுத்திய அடுப்பு, கொள்கலன்கள் உள்ளிட்ட பொருட்களும் கைப்பற்றப்பட்டதோடு, கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் வாகையடி பகுதியை சேர்ந்த 25 வயதுடைய இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டவரை மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.