FEATUREDLatestபுதினங்களின் சங்கமம்

யாழில் கஞ்சா அடிமையை காதலித்து ஓடியய 9A எடுத்த வெங்காயத்தின் காதல்!! 20 லட்சம் கட்டி மீட்ட தாய்!! பெற்றோரே அவதானம்!! பகுதி 3

யாழ்ப்பாணம் உட்பட தமிழர் பிரதேசங்களில் போதைப் பொருள் பாவனையால் நம்ப முடியாத, சினிமாவில் கூட வராத சம்பவங்கள் இடம்பெற்று வருகின்றன. குறித்த சம்பவங்கள் தொடர்ச்சியாக வம்பனில் வெளிவரும்… ஏற்கனவே வந்த இரு பகுதிகளையும் கீழே தந்துள்ளோம்…

யாழ் சிறைக்குள் கிழவிகளால் வல்லுறவுக்குள்ளான கஞ்சா விற்கும் அழகிய பெண் பட்டதாரியின் கதை இது!! video Part 2

யாழில் அதிகரிக்கும் போதை வியாபாரம்!! கஞ்சா விற்கும் அழகிய பட்டாதரி பெண்ணின் கதை இது!!

யாழ் முக்கிய வர்த்தகர் ராஜனின் மகன் 10 கோடி ரூபா பெறுமதியான குஷ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட விடயத்தை தமிழ் ஊடகங்கள் மட்டுமல்ல.. சிங்கள ஊடகங்களும் மூடி மறைத்தன… காரணம் ராஜன் மற்றும் அவனது மகன்கள் சிங்கள, தமிழ் ஊடகவியலாளர்களுடன் அந்த அளவுக்கு போதை நட்புடன் பழகியிருந்தார்கள். தமது போதைப் பொருள் வர்த்தகத்தை பெருக்குவதற்குாக ஊடக முதலாளி என்ற போர்வையிலும் ராஜன் மற்றும் மகன்கள் உருவெடுத்தார்கள். கப்பிற்றல் ரீவி, கப்பிற்றல் எப்.எப் என ஊடகங்களை வைத்துக் கொண்டு பல ஊடகவியலாளர்களை தமது வலைக்குள் விழுத்தியது மட்டுமல்லாது ஏனைய ஊடகங்களின் பிரதான முக்கியஸ்தர்களையும் தமது போதைப்பொருள் விற்பனையால் வந்த பொருளாதார வசதிகளால் மடக்கி வைத்திருந்தார்கள்.

ராஜனின் மகனின் வாழ்க்கைத் துணை என்ற போர்வையிலும் ஆடை வடிவமைப்பாளர் என்ற போர்வையிலும் Senuki Wijesundera என்பவள் உயர் சமூகத்தவர்களிடம் போதைப்பொருள் விற்பனையை சூட்சுமமாக செய்து வந்துள்ளாள் எனவும், அத்துடன் முக்கிய ஊடகங்களில் தன்னை Lolo & Lala என்ற நிறுவனத்தின நிர்வாக இயக்குனர் என்ற போர்வையில் பேட்டிகளும் கொடுத்துள்ளாள் எனவும், சிங்கள சமூகவலைத்தளங்கள் சிலவற்றில் பதிவுகள் வெளியாகியுள்ளதுடன், அந்த தளங்களில் இவள் தொடர்பாக ஏராளமான சமூகத்துக்கு ஒவ்வாத தகவல்கள் பதிவிடப்பட்டிருந்தும், போதைப்பொருளுடன் தொடர்புபட்ட தகவல்களை மட்டும் இங்கு தந்துள்ளோம்.

ராஜன் மகனின் வாழ்க்கைத் துணை……

ராஜன் மற்றும் மகன் தொடர்பான பதிவுகள் வம்பனில் வந்தபின்னர் இவர்களது அடிவருடிகளும் நட்புக்களும் சாம,பேத, தான, தண்டம் என்ற கணக்கில் பல செயற்பாடுகளை செய்து வம்பனில் இருந்து அவர்கள் தொடர்பான பதிவுகளை அகற்ற முற்பட்டிருந்தனர். இதில் சில முக்கிய ஊடகவியலாளர்களும் சம்மந்தப்பட்டிருந்ததால் அவர்களின் பெயர்களை நாம் ஊடக நட்புக்கள் என்ற ரீதியில் வெளியிடாது விட்டுள்ளோம். இறுதியில் ராஜன் குழுவினர் வம்பன் இணையத்தளத்தை முடக்குவதற்கு முயன்று சில மணி நேரங்கள் அவர்களின் ஆசையை நிறைவேற்றியிருந்தனர். இருப்பினும் வம்பில பிறந்தது மீண்டும் முடக்கத்திலிருந்து வெளிிவந்தது…..

ராஜனின் மகன் குஷ் போதைப்பொருளுடன் கைதானது தொடர்பாக வம்பன் செய்தி வெளியிட்ட பின்னர், யாழில் உள்ள பத்திரிகை ஒன்று, பெயர் விபரங்கள் வெளியிடாது தாமும் செய்தி வெளியிட்டோம் என கூறுவதற்காக, விடுகதைகள் கூறி சிலர் மட்டும் புரிந்து கொள்வது போல் எழுதும் தமது பத்தி ஒன்றில், தகவல்களை வெளியிட்டது. அதில் ராஜனின் மகன் ஹேரோயினுடன் பிடிபட்டதாகவும் ஆனால் அவனை குஷ் போதைப்பொருளுடன் பிடிபட்டதாக மாற்றியமைத்து அவனை மரணதண்டனையிலிருந்து அரசியல்தரப்புகள் காப்பாற்றியதாகவும் மறைமுகமாக அவர்களைப் பற்றி கூறி ஒரு தகவலை அவிழ்த்து விட்டிருந்தது.

இது தொடர்பாக கருத்து வெளியிட்ட போதைப்பொருள் கடத்தல்களை தடுக்கும் இடத்தில் உள்ள முக்கிய தமிழ் அதிகாரி, குறித்த ஊடகத்தில் வேலை செய்பவர்களின் அறிவை மட்டம் தட்டியுள்ளார். “குஷ்“ என்ற போதைப்பொருள் உயர் கஞ்சா வகையைச் சேர்ந்தது என்றும் ஹேரோயினின் வடிவம் வேறு என்றும் கூறி போதைப்பொருள் கடத்தல்களில் ஈடுபடுபவர்களை கைது செய்து நீதிமன்றில் ஒப்படைப்பது வரையான அடிப்படை அறிவு இல்லாதவர்களே பத்திரிகையில் வேலை செய்கின்றார்களா? என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

கைப்பற்றப்பட்ட குஷ் போதைப்பொருளை யாழ்ப்பாணத்துக்கு கொண்டு வர ராஜனின் மகன் திட்டமிட்டிருந்தான். 10 கோடி பெறுமதியான அந்த போதைப்பொருட்கள் அவ்வளவும் யாழ் வந்திருந்தால் யாழில் குறிப்பிடத்தக்க அளவான இளைஞர்கள் விசர் பிடித்து திரிந்திருப்பார்கள். ராஜனின் மகன் போதைப் பொருளுடன் அகப்பட்ட பின்னர் யாழ்ப்பாணத்தில் உள்ள அவனது சொகுசு மாளிகைக்கு பொலிசார் சென்றதாகவும் ஆனால் பொலிசாரை உள்ளே விடாது வீட்டில் இருந்தவர்கள் துரத்தியடித்ததாகவும் சமூகவலைத்தளத் தகவல்கள் தெரிவிக்கின்றனர். போதைப்பொருள் காவாலியின் வீட்டைக்கூட பொலிசாரால் நெருங்கமுடியாத அளவுக்கு இலங்கையின் நிலைமை அப்படி உள்ளதாக சமூகவலைத்தளங்களில் பதிவுகள் வெளியாகியுள்ளது.

ராஜன் யாழ்ப்பாணம் உட்பட்ட பகுதிகளில்,தன்னுடைய கப்பிற்றல் எப்.எம், கப்பிற்றல் ரீவி ஆகியவற்றில் வேலை செய்பவர்கள் ஊடாக போதைப்பொருள் விநியோகம் செய்கின்றானா? அவனது பெற்றோல் செற்றுக்களில் வேலை செய்பவர்கள் ஊடாக போதைப்பொருள் விநியோகிக்கின்றானா? அவனது மற்றை வர்த்தக நிலையங்களில் வேலை செய்பவர்கள் ஊடாக போதை வியாபாரம் செய்கின்றானா? அவனது வியாபார நிலையங்கள் ஊடகம் போன்றவற்றில் வேலை செய்பவர்களை போதைக்கு அடிமையாக்கியுள்ளானா? அவனது வியாபார நிலையங்களுக்கு செல்லும் வாடிக்கையாளர்களின் நிலை என்ன? என்பவற்றை எல்லாம் நினைத்து பார்க்கும் போது………….

யாழ்ப்பாணத்துக்கு போதைப்பொருளை கடத்தும் ராஜன் மற்றும் மகன் உட்பட்டவர்கள் சொகுசு வாகனங்கள், வீடு, பிரபல வர்த்தகர், தொழிலதிபர்  என்ற போர்வையில் உலா வருவதிலும் பார்க்க நேர்மையாக உழைக்கும் யாழ்ப்பாணத்தவர்களின் சிறுநீரை குடித்து வாழலாம் என சமூகவலைத்தளங்களில் பதிவுகள் வெளியாகியுள்ளன.

வடபகுதியை நரகமாக்கும் செயற்பாட்டில் ராஜனின் மகன் மட்டுமல்ல இன்னும் 3 முக்கிய வர்த்தகப் புள்ளிகள் செயற்பட்டு வருகின்றார்கள். சமூகத்தில் நல்லவன் போல் நடித்து நாடகமாடும் அவர்களும் விரைவில் அகப்படும் வரை பொறுமையுடன் காத்திருப்போம்…..

9A எடுத்த வெங்காயத்தின் காதல்

வெங்காயம் என்று சிலரை ஏசுவது பொதுவாக வழக்கத்தில் உ்ள்ளது. வெங்காயத்தி்ன் தன்மைகளில் ஒன்று உரிக்க உரிக்க வெறும் தோல் மட்டமே வருவதுடன் உரிக்கும் போது மற்றவர்களையும் அழ வைத்துவிடும்.

2019ம் ஆண்டு க.பொ.த சாதாரணதரத்தில் 9 பாடங்களிலும் ஏ எடுத்து யாழ் நகரில் உள்ள பிரபல பாடசாலையில் கற்றுவருகின்றாள் கவிதா (புனைபெயர்). கவிதாவின் பெற்றோர் அரச ஊழியர்கள். அத்துடன் பணவசதி படைத்தவர்கள். கவிதாவின் ஒரு அண்ணன் மருத்துவபீட மாணவன். மற்றைய அண்ணன் யாழ்பல்கலைக்கழக விஞ்ஞான பீட மாணவன். இரு அண்ணன்களுக்கும் பாசமிக்க தங்கை கவிதா. கவிதாவை பாடசாலை மற்றும் ரியூசன் போன்ற அனைத்து இடங்களுக்கும் பெற்றோர் தனியே அனுப்புவதில்லை. அண்ணன்கள் அல்லது தாய் தந்தையுடனே கவிதா வெளி இடங்களுக்கு சென்று வருவார்.

2020ம் ஆண்டு கொரோனா காலகட்டத்தில் பாடசாலை மற்றும் ரியூசன் செல்வது தடைப்பட்டு சூம் மூலமான கற்றல் நடவடிக்கை தொடங்கியது. இந் நேரத்தில் தான் கவிதாவுக்கு முதல் முதல் தொலைபேசி மூலமான வெளியுலகத் தொடர்பு ஏற்பட்டது. பெற்றோர், அண்ணன்களுக்கு தெரியாது ரிக்டொக் மற்றும் பேஸ்புக் போன்றவற்றில் கவிதா தனது சொந்த பெயரில் இல்லாது போலிப் பெயரில் உலா வரத் தொடங்கினாள். இதன் போதே கஞ்சாக் காவாலி ஒருவனின் இணைப்பு கிடைத்துள்ளது. அடிக்கடி அவனுடன் தனக்குச் சொந்தமான போலயான சமூகவலைத்தளத்தில் தொடர்பு கொள்ளத் தொடங்கினாள் கவிதா. கவிதாவுடன் தொடர்பில் இருந்தவன் ரிக்ரொக்கில் காதல் பாட்டுகளுக்கு வாயசைத்து பாடிவரும் ஒருவன். இவனுக்கு பெருமளவு ரசிகர் கூட்டம் இருந்துள்ளது. வெளியுலகம் அடிபடாது இருந்த கவிதா அவனது ரிக்ரொக் செயற்பாட்டில் மருண்டு போய் உயிருக்குயிராக காதலிக்க தொடங்கினாள்.

கவிதாவின் படிப்பு காதலால் குழம்பியது… ஓ.எல் பரீட்சையில் சிறந்த பெறுபேறு எடுத்த கவிதா ஏ.எல் பாடங்களில் 50 க்கும் குறைவான புள்ளிகள் பெறத் தொடங்கினாள். பெற்றோர், சகோதரர்களுக்கு அவள் படிப்பில் பின்னடைந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.ஆனாலும் அவளது காதல் திருவிளையாடலை அவர்கள் அறியாவண்ணம் மிகவும் இரகசியமாக வைத்திருந்தாள்…. 2022ம் ஆண்டு ஏ.எல் பரீட்சையின் இறுதி நாள் காலை கவிதாவை பாடசாலையில் இறக்கி விட்டு தந்தை சென்றார். பரீட்சை முடிவடைந்தும் கவிதா பாடசாலையிலிருந்து வெளியே வரவில்லை. தந்தை பாடசாலையில் நுழைந்து தேடத் தொடங்கினார். கவிதாவின் தந்தைக்கு தொலைபேசி அழைப்பு ஒன்று வந்தது. ”அப்பா நான் ஒருவருடன் வந்துவிட்டேன். என்னைத் தேடாதீர்கள், வீட்டுக்குச் செல்லுங்கள்” என்று மட்டும் கூறி விட்டு கவிதை தொலைபேசி அழைப்பை துண்டித்தாள்.

கவிதாவின் வீடு அல்லோலகப்பட்டது. கவிதா கதைத்த தொலைபேசி எண்ணுக்கு கவிதாவின் உறவுகள் தொடர்ச்சியாக அழைப்பு எடுத்தார்கள். ஆனால் பதில் இல்லை. யாழ்ப்பாண பொலிஸ் அதிகாரி ஒருவரின் ஒத்துழைப்புடன் கவிதா தொடர்பு கொண்ட தொலைபேசி அழைப்புக்குரிய நபர் அடையாளம் காணப்பட்டான். அவனது தகவலின்படி கவிதாவும் கவிதாவின் காதலனும் யாழ் தென்மராட்சிப் பகுதியில் பொலிசாரால் பிடிக்கப்பட்டார்கள். இருப்பினும் கவிதா குறித்த வயதை அடைந்துள்ளபடியால் அவளது விருப்பின் பேரிலேயே அவள் காதலனுடன் சென்றதாலும் பதிவுத்திருமணம் செய்திருந்ததாலும் பொலிசாரால் எதுவும் செய்ய முடியவில்லை. தாய், தந்தை, சகோதரர்களின் கெஞ்சல், மன்றாட்டங்களையும் கருத்தில் எடுக்காது கவிதா தனது காதலனுடன் பொலிஸ் நிலையத்திலிருந்து சென்றுவிட்டாள். சரியாக 4 மாதம் கழித்து இவ் வருட நடுப்பகுதியில் கவிதாவிடமிருந்து தாய்க்கு அழைப்பு வந்துள்ளது. தான் வடமராட்சிப் பகுதியிலிருப்பதாகவும் தன்னால் அவனுடன் வாழமுடியாது எனவும் தன்னை வந்து மீட்கும்படியும் கவிதா கதறி அழுதுள்ளாள். உடனடியாக அவள் தங்கியிருந்த பகுதிக்கு தாய் மற்றும் உறவுகள் சென்றுள்ளார்கள். மிகவும் பின்தங்கிய பிரதேசம் ஒன்றில் அரைகுறையாக கட்டி முடிக்கப்படாதிருந்த வீட்டுத் திட்ட வீடு ஒன்றிலிருந்த கவிதா மீட்கப்பட்டாள். அவளை ரிக்ரொக்கில் காதலித்து கலியாணம் கட்டியவன் போதைப்பொருள் அடிமை என்பதை கவிதா அவனுடன் தங்கியிருந்த போதே அறிந்தாள். அதுவும் அவனது நடவடிக்கைகள் தொடர்பில் சந்தேகத்துடன் இருந்த கவிதாவுக்கு அவன் தங்கியிருந்த வீட்டின் அயலில் உள்ளவர்கள் கூறிய தகவல்கள் மூலமே அவன் கஞ்சாவுக்கு அடிமையானவன் என அறிந்து கொண்டாள். அவனிடம் வரும் நண்பர்கள் அவளை தவறான முறையில் அணுக முற்பட்டும் அவன் எதுவும் பேசாது இருந்ததும் கவிதாவுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இவற்றால் பயந்தே அவள் தாயை தொடர்பு கொண்டாள்….

கவிதாவை தாய் தனது இருப்பிடம் கொண்டு வந்த பின்னர் அவளது வீட்டுக்கு தனது காவாலி நண்பர்களுடன் சென்று கடும் தொல்லை கொடுக்கத் தொடங்கினான் கணவன். பதிவுத் திருமணம் செய்திருந்ததால் விவாகரத்து எடுக்க வேண்டிய நிலையில் பெற்றோர் இருந்தார்கள். இந் நிலையில் அவனது நண்பர்கள் மூலமாகவே அவனுடன் பேச்சுவார்த்தை நடாத்தி அவனிடமிருந்து விவாகரத்து பெற்றுள்ளாள் கவிதா. அதற்காக அவனுக்கு கொடுக்கப்பட்ட பணம 20 லட்சங்கள்…… தற்போது கவிதாவும் தாயாரும் இலங்கையிலிருந்து வெளியேறியுள்ளார்கள். அவர்கள் எங்கு இருக்கின்றார்கள் என்ற விடயம் கவிதாவின் நெருங்கிய உறவுகளுக்கே வெளிச்சம்…. அயலவர்கள் கூட அவர்கள் எங்கு சென்றார்கள் என தெரியாத நிலையில் உள்ளார்கள்….

மேலும் போதைப்பொருள் பாவனையாளகள் தொடர்பான அதிர்ச்சித் தகவல்கள் அடங்கிய பதிவுகளை தொடர்ந்து வம்பனில் வெளியாகும்.