கோப்பாய் ஆசிரியர் கலாசாலையின் அதிபராக உள்ளவர் சந்திரமௌலீசன் லலீசன். இவருக்கு செந்தமிழ்ச்சொல்லருவி எனும் பட்டப் பெயரும் உள்ளது. பல்வேறுபட்ட தமிழ் கலாச்சார நிகழ்வுகள் மற்றும் தமிழ் அரங்குகளில் இவர் சிறப்பான சொற்பொழிவுகள் ஆற்றியவர். இவ்வாறான பெயர் உள்ள ஒருவர் தென்னிந்திய சினிமாக் கூத்தாடிகளின் பெயரில் டான் ரீவியில் யாழ் மாணவர்களை வைத்து தலையா, தளபதியா என சொற்சமர் அமைத்து தறுதலை வேலை பார்த்துள்ளார். மாணவர்களை வலுவாக்க வேண்டிய முக்கிய பணியை செய்யும் ஆசிரியர்களை உருவாக்கும் கலாச்சாலையின் தலைமைப் பொறுப்பில் இருக்கும் லலீசன், இவ்வாறு வெங்காய வேலை பார்த்துள்ளது சமூகவலைத்தளங்களில் பெரும் அதிர்வலையையும் கண்டனத்தையும உருவாக்கியுள்ளது. யாழ்ப்பாணம் இனி என்ன நிலைக்கு மாறப் போகின்றது என்பது லலீசனின் இந்த வெங்காய வேலையிலிருந்து புரிந்து கொள்ளலாம்…..
இனி வரும் ”இன்றைய இளைஞர்கள் அதிகம் பார்க்க விரும்புவது நயன்தாராவின் மார்பையா? திரிசாவின் மார்பையா” என்றும் சொற்சமர் வைத்து லலீசன் அதற்கு தலைமை தாங்கும் நிலையும் ஏற்படலாம்…







செய்தி ஆசிரியரே நானும் வம்பன் பத்திரிகையின் வாசகி தான். டான் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் பட்டிமன்றங்களை நானும் பார்த்திருக்கிறேன். நடுவர் லலிசன் ஐயா அவர்கள் இந்த விவாதத்தின் முடிவில் கூறிய தகவல்களை தாங்கள் நன்கு அவதானித்திருந்தால் இப்படி ஒரு செய்தியை வெளியிட்டு இருக்க மாட்டீர்கள் என நம்புகிறேன். ” இந்த தலைப்பு எனக்கு ஆரம்பத்தில் சங்கடத்தை ஏற்படுத்தி இருந்த போதிலும் விவாதத்தின் போது மாணவர்கள் தல தளபதி இருவரதும் படம் சார்ந்த தகவல்களை மட்டும் முன்வைக்காது சமூகத்திற்கு அவர்கள் செய்யும் நன்மைகளையும் குறிப்பாக சுட்டி காட்டி இருந்தார்கள் அதாவது அவர்கள் தலையோ தளபதியோ படத்தில் நடிப்பதை வைத்து அவர்களை தலையில் வைத்து கொண்டாடவில்லை. அவர்கள் சமூகத்திற்கு செய்யும் பணிகளை வைத்து தான் யார் சிறந்தவர் என குறிப்பிடுகிறார்கள்” என்ற பதிவை முன் வைத்திருந்தார். ஆகையால் அந்த விவாதத்தை ஆரம்பத்தில் இருந்து இறுதிவரை பார்த்த ரசிகர்கள் எவரும் அந்த விவாதத்தின் நோக்கத்தை தவறாக எடுக்கப் போவதில்லை! அந்த விவாதத்தின் நோக்கம் என்னவென்றால் சமூகத்துக்கு மத்தியில்; (படங்களை வைத்து இல்லை!) சமூகத்திற்கு மத்தியில் தலயா தளபதியா சிறந்தவர்? நிஜ வாழ்க்கையில் யாரு ஹீரோ? என்பது தான் அந்த தலைப்பின் விளக்கம். அதை கருத்தில் கொண்டு தான் மாணவர்களும் வாதாடியிருந்தார்கள் நடுவர் லலிசன் ஐயா அவர்களும் தீர்ப்பளித்திருந்தார்! இதை சற்று புரிந்து கொண்டு உங்கள் செய்தியை வரைந்தால் இன்னும் நன்றாக இருக்கும் என்று நினைக்கின்றேன்!