புதினங்களின் சங்கமம்

கொழும்பு – காலி முகத்திடலில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்! ( photos)

கொழும்பு – காலி முகத்திடலில்
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்!

கொழும்பு காலி முகத்திடலில் முதன்முதலாக முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு இன்று (18) காலை அனுஷ்டிக்கப்பட்டது.

அங்குள்ள தமிழ் உறவுகளும் நூற்றுக்கணக்கான சிங்கள மக்களும் இணைந்து இந்த நிகழ்வை ஏற்பாடு செய்து நடத்தியிருக்கிறார்கள்.

தென்னிலங்கை சிங்கள சகோதரர்கள் தமிழ் மக்களுடைய வலிகளை உண்மையாக உணர்ந்து கொண்டால் மட்டுமே எதிர்காலத்தில் வடக்கு கிழக்கு தமிழர் தாயகம் என ஏற்றுக்கொள்ளப்பட்டு இரு இனங்களும் சந்தோஷமாக வாழும் நிலையை ஏற்படுத்த முடியும்.

அங்கு இன்று இடம்பெற்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் இதற்கு ஒரு களமாக அமைய வேண்டும் என்று அனைவரும் பிரார்த்திக்கின்றோம்.

இதேவேளை, 2009 ஆம் ஆண்டு யுத்தம் மௌனிக்கப்பட்ட பின்னர் கடந்த 2021 ஆம் ஆண்டு வரை கொழும்பில் இராணுவ வெற்றி கொண்டாட்டங்கள் இடம்பெற்று வந்த நிலையில் இன்றைய தினம், மஹிந்த ராஜபக்ச அரசாங்கம் சிங்கள மக்களால் துரத்தப்பட்ட நிலையில், முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு அங்கு இடம் பெற்றிருக்கின்றமை திருப்புமுனையாக நோக்கப்படுகின்றது