புதினங்களின் சங்கமம்

யாழ் கோண்டாவிலில் ஆவா குழுவின் இராணுவப் பிரவு வீடு ஒன்றின் மீது தாக்குதல்!! (Photos)

கோண்டாவில் இராமகிருஷ்ண மகா வித்தியாலயத்திற்கு அண்மையாகவுள்ள வர்த்தகரின் வீட்டு வளாகத்துக்கு புகுந்த கும்பல் அட்டூழியத்தில் ஈடுபட்டுள்ளது.
வீட்டின் முன் நிறுத்திவைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளை எடுத்துச் சென்று உப்புமடச் சந்தியில் போட்டு சேதப்படுத்திவிட்டுச் சென்றுள்ளது.
இந்தச் சம்பவம் இன்று(வியாழக்கிழமை) அதிகாலை 5.15 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
3 மோட்டார் சைக்கிள் மற்றும் முச்சக்கர வண்டியில் வந்த வன்முறைக் கும்பலே இந்தத் தாக்குதலை மேற்கொண்டதாக கோப்பாய் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
புன்னாலைக்கட்டுவன் சந்தியில் அலைபேசி வர்த்தக நிலையத்தை நடத்திவருபவரின் வீட்டிலே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது என பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
இந்தத் தாக்குதலை தமது இராணுவப்பிரிவே நடாத்தியதாக ஆவா குழுவினர் தமது வட்சப் குறூப்புக்குள் பதிவை இட்டுள்ளார்கள். ஆவா குழு என்பது இலங்கை அரசாங்கத்தின் பாதுகாப்புத் தரப்புடன் நெருங்கிச் செயற்படும் ஒரு சட்டவிரோத அமைப்பு என பொதுமக்கள் கருத்துத் தெரிவித்துவருகின்றார்கள். இந்த குழுவினரே யாழ்ப்பாணத்தில் போதைப்பொருள் பாவனை மற்றும் கடத்தல், கொள்ளை என்பவற்றை மிகவும் துணிவுடன் நடாத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

May be an image of tree and outdoorsNo photo description available.May be an image of 1 person, motorcycle, road and text that says "NPBGS5555"