இன்றைய இராசிபலன் (14.04.2019)
மேஷம்: புதிய சிந்தனைகள் மனதில் தோன்றும். பிள்ளைகளின் வருங்காலத் திட்டத்தில் ஒன்று நிறைவேறும். ஆடம்பரச் செலவுகளைக் குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். பழைய கடன் பிரச்னையில் ஒன்று தீரும். வியாபாரத்தை விரிவுப்படுத்துவீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் உதவுவார்கள். புதுமை படைக்கும் நாள்.
ரிஷபம்: எதிர்ப்புகளையும் தாண்டி முன்னேறுவீர்கள். வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். மகளுக்கு நல்ல வரன் அமையும். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். உத்யோகத்தில் சக ஊழியர்கள் ஒத்துழைப்பார்கள். உழைப்பால் உயரும் நாள்.
மிதுனம்: துணிச்சலாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். பிள்ளைகளால் பெருமை யடைவீர்கள். பிரபலங்கள் அறிமுகமாவார்கள். விசேஷங் களை முன்னின்று நடத்துவீர்கள். வியாபாரத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் உயரதிகாரிகள் உங்கள் கோரிக்கையை ஏற்பார்கள். தைரியம் கூடும் நாள்.
கடகம்: குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். விருந்தினர்களின் வருகையால் வீடு களைக் கட்டும். உடல் நலம் சீராகும். அழகு, இளமைக் கூடும். நவீன மின்னணு சாதனங்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த ஒப்பந்தம் உங்களுக்குக் கிடைக்கும். உத்யோகத்தில் உங்கள் உழைப்பிற்கு அங்கீகாரம் கிட்டும். புதிய பாதை தெரியும் நாள்.
சிம்மம்: பிற்பகல் 1.30 மணிவரை ராசிக்குள் சந்திரன் இருப்பதால் எதிர்பார்த்தவை தாமதமாகும். அக்கம்-பக்கம் இருப்பவர்களை அனுசரித்துப்போங்கள். உங்களின் அணுகுமுறையை மாற்றுங்கள். வியாபாரத்தில் வேலையாட்களின் ஒத்துழைப்பு சுமாராக இருக்கும். உத்யோகத்தில் ஓரளவு வேலைச்சுமை குறையும். மாலையிலிருந்து தடைகள் நீங்கும் நாள்.
கன்னி: குடும்பத்தில் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. யாரையும் எடுத்தெறிந்துப் பேச வேண்டாம். எதிர்மறை எண்ணங்கள் வரக்கூடும். வியாபாரத்தில் போட்டிகள் இருக்கும். உத்யோகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். பிற்பகல் 1.30 மணி முதல் ராசிக்குள் சந்திரன் நுழைவதால் எதிலும் எச்சரிக்கை தேவைப்படும் நாள்.
துலாம்: உங்களின் இலக்கை நோக்கி முன்னேறுவீர்கள். சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். பிரியமான வர்களுக்காக சிலவற்றை விட்டுக் கொடுப்பீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் ரசனையைப் புரிந்துக் கொள்வீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் பாராட்டுவார்கள். இனிமையான நாள்.
விருச்சிகம்: எதையும் சமாளிக் கும் சாமர்த்தியம் பிறக்கும். பழைய உறவினர், நண்பர்கள் தேடிவந்துப் பேசுவார்கள். பயணங்கள் சிறப்பாக அமையும். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் தலைமையின் நம்பிக்கையைப் பெறுவீர்கள். மதிப்புக்கூடும் நாள்.
தனுசு: கோபத்தை கட்டுப்படுத்தி உயர்வதற்கான வழியை யோசிப்பீர்கள். பிள்ளைகளால் மரியாதைக் கூடும். பிரபலங்கள் உதவுவார்கள். அரசு காரியங்கள் விரைந்து முடியும். வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகளுடன் இணக்கமான சூழ்நிலை உருவாகும்.
மகரம்: பிற்பகல் 1.30 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் பழைய நினைவுகளில் மூழ்குவீர்கள். தடைப்பட்ட வேலையை மாறுபட்ட அணுகுமுறையால் முடித்துக் காட்டுவீர்கள். சிலவற்றிற்கு உங்கள் அவசர முடிவுகள் தான் காரணம் என்பதை உணர்வீர்கள். வியாபாரத்தில் கடினமாக உழைத்து லாபம் பெறுவீர்கள். உத்யோகத்தில் பணிகளை போராடி முடிப்பீர்கள்.
கும்பம்: குடும்பத்தில் ஆரோக்யமான விவாதங்கள் வந்துப்போகும். கல்யாணப் பேச்சுவார்த்தை வெற்றியடையும். புதியவர்கள் நண்பர்களாவார்கள். வெளிட்டாரத்தில் மதிப்புக் கூடும். வியாபாரம் சூடுபிடிக்கும். உத்யோகத்தில் மேலதிகாரி ஆதரிப்பார். பிற்பகல் 1.30 மணி முதல் சந்திராஷ்டமம் தொடங்குவதால் கவனம் தேவைப்படும் நாள்.
மீனம்: குடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்துக்கொள்வீர்கள். சபைகளில் முதல் மரியாதைக் கிடைக்கும். விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள். வீட்டை புதுப்பிக்க திட்டமிடுவீர்கள். வியாபாரத்தில் அனுபவமிக்க வேலையாட்களை தேடுவீர்கள். உத்யோகத்தில் உங்களின் நிர்வாகத் திறமை வெளிப்படும்.