மட்டக்களப்பு நகரின் மத்தியில் இப்படி ஒரு பயங்கரமா? (Photos)
மட்டக்களப்பு நகரின் மத்தியில் காடு அடர்ந்த பயங்கரமான இடமொன்று தொடர்பாக மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
நகரத்தின் மத்தியில் இப்படி ஒரு இடம் எதற்கு ? என்ற சந்தேகத்துடன் நாட்டின் தற்போதைய அசாதாரண சூழ்நிலையில் குறித்த இடம் தொடர்பாக அச் சூழலலை அண்டிய மக்கள் மிகவும் அச்சமடைவதோடு உடனடியாக குறித்இடம் தொடர்பாக அதிகாரிகள் கவனத்தில் கொள்ள வேண்டுமென கோரிக்கை விடுக்கின்றனர்.
மட்டக்களப்பு கள்ளியங்காடு
இருதயபுரம் கிழக்கு கிராமசேவகர் பிரிவு
சேமைக்காலைக்கு முன்னால் உள்ள அரச கட்டிடம் (களஞ்சியசாலை) தற்போது கவனிப்பாரற்று காடு மண்டி கயவர்களின் சட்டவிரோத செயற்பாடுகளின் கூடாரமாக காணப்டுகிறது .
பல சட்டவிரோத செயற்பாடுகள் தொடர்ச்சியாக இடம்பெற்றுவருவதுடன் குறித்த கட்டிடத்திற்குள் எது நடந்தாலும் வெளியில் உள்ளவர்களுக்கு பார்க்கவோ, கேட்கவோ முடியாது எனவும் இது தொடர்பாக பொறுப்பு வாய்ந்த அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்றும் இது வரை எந்தவித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லையென பொது மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.